திருப்பதி பெருமாளுக்கு நடக்கும் அலங்காரம் – வீடியோ

Lord Perumal
- Advertisement -

உலகின் அதிக வருமானங்கள் கொண்ட கோவில்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது திருப்பதி. ஒரு கோயிலிற்கு அதிக வருமானம் வரவேண்டுமானால் அதிக பக்தர்கள் வர வேண்டும். அதிக பக்தர்கள் வர வேண்டுமானால் நினைத்தது நடக்க வேண்டும். பரம்பொருளாக திருப்பதியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். அவர் சிலைக்கு நடக்கு அலங்காரம் குறித்த காட்சி இதோ.

- Advertisement -

இந்தியாவில் எத்தனையோ திருத்தலங்கள் இருந்தாலும் பல நூறு ஆண்டுகளாக சிறிதளவும் மகிமை குன்றாமல் நாளுக்கு நாள் பல பட்சம் பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் கோவிலாக விளங்குகிறது திருப்பதி பெருமாள் கோவில். இந்த திருத்தலமானது 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும். ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறிக்கும் வகையில் ஏழு மலைகளை கொண்டுள்ளது திருமலை. இந்த மலைக்கு சேசாசலம் என்றொரு பெயரும் உண்டு.

உலகிலேயே பழம் பெரும் பாறைகள் கொண்ட இரண்டாவது இடமாக திருமலை திகழ்கிறது. அப்படியானால் இந்த மலை எப்போது உருவாகி இருக்கும் இங்கு பெருமாள் எப்போது வந்து அமர்ந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க கூட முடிய வில்லை. இங்குள்ள பெருமாள் கோவிலானது எந்த கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் இந்த கோவிலை பெல்வேறு அரசர்களும் பராமரித்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. இங்கு வீற்றிருக்கும் பெருமாளின் அருளை பெற நாம் அனைவரும் அவரை நினைத்து பிராத்திப்போம்.

- Advertisement -