புரட்டாசி மாதத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஆண்டியும், ‘குபேரன்’ ஆகலாம் தெரிந்து கொள்ளுங்கள்!

perumal

ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதனுக்கும் நாமும் குபேரன் போல் வசதி, வாய்ப்போடு வாழ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக இருக்கும். அதில் தவறு ஒன்றும் கிடையாது. எல்லா கஷ்டத்தையும் சமாளிக்க பணம் ஒன்றே இன்று பிரதானமாக இருக்கிறது. அதற்காக பணமே வாழ்க்கை என்பது அல்ல. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுடைய இந்த மந்திரத்தை தினமும் காலையில் உச்சரித்தால் ஆண்டி கூட குபேரன் ஆகலாம் என்பது ஆகம விதி. அதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்ன மந்திரம் அது? என்பதைப் பற்றிய தகவல்களை தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

Perumal

நாளை புரட்டாசி 1 ஆம் திகதி ஆரம்பமாகிறது. நாளை அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் பூஜை அறையில் அமர்ந்து நேரமிருந்தால் 108 முறையும், நேரமில்லை என்றால் 11 முறையும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். உங்களுக்கு நிறைய துன்பங்கள் வாழ்க்கையில் இருந்து வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கஷ்டங்கள் இறைவன் கொடுத்துக் கொண்டிருப்பார். அவைகளெல்லாம் அகல இந்த மந்திரம் ஒன்றே போதும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் வலிமை வாய்ந்த சக்தியுள்ள மந்திரமாக இருக்கின்ற பெருமாளுடைய காயத்ரி மந்திரம் தான் இது.

நீங்கள் எவ்வளவு அவசரமாக வேலைக்கு கிளம்புபவர்களாக இருந்தாலும் சரி, ஒரு 5 நிமிடம் இந்த மந்திரத்தை பூஜை அறையில் பெருமாள் படம் முன்பு அமர்ந்து உச்சரித்து விட்டு செல்லுங்கள். இதனால் உங்களுடைய மனமும் அமைதி பெறுவதை நீங்களே உணர்வீர்கள். பணக்காரனாக வேண்டும் என்பதற்காக இந்த மந்திரத்தை உச்சரிக்காதீர்கள்! பெருமாளுடைய ஆசீர்வாதம் கிடைக்கவும், வீட்டில் சுபீட்ச நிலை நீடிக்கவும் வேண்டிக் கொண்டு மனமார உச்சரிக்க வேண்டும்.

mantra sign

இதோ உங்களுக்கான பெருமாள் காயத்ரி மந்திரம்:
ஓம் நிரஞ்சனாய வித்மஹே!
நிராபாஸாய தீமஹி!
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!

- Advertisement -

நம்முடைய ஜாதகப்படி கிரக அமைப்புகள் சரியில்லை என்றாலும், தொடர்ந்து கஷ்ட நிலை இருந்தாலும், தொழில் மற்றும் வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இருக்கின்ற பிரச்சனைகள் அகலவும், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கவும் இந்த மந்திரத்தை தினமும் காலையில் புரட்டாசி மாதத்தில் உச்சரிக்கலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி பெருமாள் மீது முழு பக்தி கொண்டவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் மிக விரைவாக உங்கள் வாழ்க்கை தரம் உயர்வது நிச்சயம்.

kuberan

ஒரு முறை அந்த குபேரனுக்கு செல்வத்தை இழக்கும் அபாயம் வந்ததாம். அப்போது அவர் இந்த பெருமாள் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தாராம். அவர் இழக்க இருந்த அத்தனை செல்வங்களும் பத்திரமாக அவருக்கு திரும்பி கிடைத்ததாம். செல்வத்தை இழக்கும் தருவாயில் பெருமாள் காயத்ரி மந்திரம் உச்சரித்து வருபவர்களுக்கு ஆகச்சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்களும் தினமும் உச்சரித்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உயர்ந்த பதவி உங்களை தேடி வர, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்! கட்டாயம் ராஜ வாழ்க்கை உங்களைத் தேடி வரும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.