ஸ்ரீநிவாச பெருமாளின் கல்யாண வைபோக நடனம் – வீடியோ

Perumaal thirumanam

காக்கும் கடவுளான பெருமாளுக்கு பல கோவில்களில் கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதை காண பக்தர்கள் பலர் வருவதுண்டு. குறிப்பாக திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் பெருமாளுக்கு நடக்கும் திருமணத்தை கண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இப்படி பல சிறப்புக்கள் கொண்ட பெருமாள் கல்யாண வைபவத்தை அற்புத நடனம் மூலம் நிகழ்த்திக்காட்டிய ஒரு சிறப்பான வீடியோ பதிவு இதோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

நம்மை காக்க எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் திருமாலே காக்கும் கடவுளாக அறியப்படுகிறார். இவர் இந்த பூவுலகில் மனிதனாக பிறந்து மனிதர்கள் படும் இன்ப துன்பங்கள் அனைத்தையும் தானும் அன்பவித்து வாழ்ந்து காட்டியவர். திருமால் மனிதனாக பிறப்பதற்கு சில புராண கதைகளும் உண்டு. அதன் படி பார்த்தால் அசுரர்களுக்கெல்லாம் குருவாக இருந்த சுக்ராச்சாரியாரின் மனைவியை திருமால் கொல்ல நேருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுக்ராச்சாரியார் திருமாலுக்கு ஒரு சாபம் விடுகிறார்.

இந்த பூமியில் திருமால் ஏழுமுறை மனித பிறப்பெடுத்து வாழ வேண்டும் என்பதே சுக்ராச்சாரியாரின் சாபம். இதன் காரணமாக தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன் ஆகிய அவதாரங்களை திருமால் எடுக்க நேரிட்டது. இதுவரை ஆறு அவதாரங்களை எடுத்த திருமால் தன் ஏழாவது அவதாரமான கல்கி அவதாரத்தை இன்னும் எடுக்கவில்லை என்று நம்பப்படுகிறது.