இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. பெருமாளுக்கு இந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்தீர்களா? அப்படி என்றால், இனி உங்களுக்கு எல்லா கஷ்டங்களுக்குமே விடிவு காலம் பிறந்து விடும்.

perumal
- Advertisement -

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, நம்மில் நிறைய பேருடைய வீட்டில் பெருமாளுக்கு விசேஷமான வழிபாடுகள் நடந்திருக்கும். பெருமாளுக்கு பிடித்த, பலவகையான பலகாரங்களும், பழ வகைகளும், பெருமாளுக்கு படைக்கப்பட்டு, மாவிளக்கு போடும் பழக்கம் இருப்பவர்கள், மாவிளக்கு போட்டு பூஜையை நிறைவாக, காலை பொழுதிலேயே முடித்திருப்பீர்கள். உங்களுடைய வீட்டு வழக்கப்படி, நைவேத்தியமாக எந்த பிரசாதத்தை வைத்திருந்தாலும் சரி, பெருமாளுக்குப் பிடித்தமான இந்த ஒரு பொருளை நைவேத்தியமாக வைத்தீர்களா? என்பதை நினைவுகூர தான் இந்த பதிவு.

perumal-1

ஒருவருடைய வாழ்க்கையில் நிரந்தரமாக வறுமை இருந்து வரும் சூழ்நிலையில் கூட, அவரை செல்வந்தராக மாற்றக்கூடிய சக்தி பெருமாளுக்கு உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். கிருஷ்ணர் அவதாரத்தில், தன்னுடைய நண்பர் குசேலரை ஏழ்மை நிலையிலிருந்து, செல்வந்தராக மாற்றிய பெருமையும் எம்பெருமானையே சேரும்.

- Advertisement -

பெருமாள் என்று சொன்னாலே, சில சில பேர் ‘பணக்கார சுவாமி’ என்று சொல்லுவார்கள். உண்மையில், பணக்காரர்கள் மட்டும்தான் பெருமாளை கும்பிட வேண்டும் என்பது அர்த்தமில்லை. ஏழ்மையில் உள்ளவர்கள், பெருமாள் வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில், அவர்களுடைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக, செல்வந்தர்களாக உயரும் என்பது தான் இதற்கு அர்த்தம்.

krishnar-kuselar

பெருமாளுக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் அவலும் ஒன்று. புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று, பெருமாளுக்கு, மிகவும் பிடித்தமான ‘அவல்’ நிவேதனமாக படைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். எவர் ஒருவர், அவலை, பெருமாளுக்கு பிரசாதமாக வைத்து, மனமுருகி, நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டாலும், அவருடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

சில பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது. முருகனை வழிபாடு செய்பவர்கள், சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள், வீட்டில் பெருமாளை வழிபாடு செய்யலாமா? அதாவது நாமம் போடுபவர்கள், பட்டை போடுபவர்கள் என்ற குழப்பம் தான் அது. இந்தப் பாகுபாடுகள் எல்லாமே மனிதர்கள் மனதில் மட்டும் தான். இறைவனுக்கு எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்பவர்களும், பெருமாளை வழிபடலாம். தவறு கிடையாது. பெருமாளை வழிபடுபவர்களும், மற்ற தெய்வத்தையும் வழிபடலாம், அதிலும் தவறு இல்லை.

perumal

முடிந்தால் புரட்டாசி மாதம் முழுவதுமே தினம்தோறும், ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு கை பிடி அவல் வைத்து, பெருமாள் பேரைச் சொல்லி, ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்ற நாமத்தை உச்சரித்து, பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி, பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து, பெருமாளை வழிபாடு செய்யுங்கள். தினம்தோறும் முடியவில்லை என்றாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது, கொஞ்சம் அவலை, பெருமாளுக்கு படைக்க மறக்காதீர்கள்.

- Advertisement -

aval

பெரும்பாலும் அவல் எல்லோர் வீடுகளிலும் இருக்கும். உங்களுடைய வீட்டில் அவல் இல்லை என்றாலும், பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் கட்டாயம் கிடைக்கும். கொஞ்சம் அவலை வாங்கி வந்து, இன்று மாலை பெருமாளுக்கு நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய மறக்காதீர்கள். குசேல வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ அந்த பெருமாள் நமக்கு நிச்சயம் வழி காட்டுவார்.

இதையும் படிக்கலாமே
நீண்டகாலமாக இருந்து வரும், தீராத துயரத்திற்கு தீர்வு கிடைக்க, சிவ வழிபாட்டை தினம் தோறும் வீட்டில் இப்படி செய்யுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -