முகத்தில், முகப்பரு இருந்த அடையாளமே தெரியாமல், பருக்களை வேர் பகுதியில் இருந்து அகற்ற முடியும். அதற்கு 3 நாட்களும், இந்த 3 பொருட்களும் மட்டுமே போதும்.

face7

பொதுவாக இளம் வயது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, பருவ காலத்தில் உடல் நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் அவர்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் வரத்தான் செய்யும். இந்த முகப்பருக்களை நினைத்து இளம் வயது பெண்களும் ஆண்களும் அதிகமாகவே கவலைப்படுவார்கள். காரணம் முகப்பரு வந்து மறைந்தாலும், அந்த இடத்தில் முகப்பரு வந்து போன தழும்பு அப்படியே இருக்கும். அந்த தழும்பையும் நிரந்தரமாக நம்மால் நீக்க முடியும். மீண்டும் மீண்டும் முகப்பரு வராமல் இருக்க அந்த முகப்பருவை வேரில் இருந்து நீக்கவும் முடியும். அது எப்படி என்பதைப் பற்றித் தான் இயற்கையான முறையில் ஒரு ரெமிடியை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vepilai

ஒன்னும் இல்லைங்க! அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு முறை தான் இந்த முறை. பயப்படாமல் இதை உங்களுடைய முகத்தில் போட்டுக்கொள்ளலாம். 100% ரிசல்டுக்கு நிச்சயமாக கேரண்டி உண்டு. அந்த 3 பொருட்களை இப்போதே பார்த்து விடுவோமா? புதினா தழைகள், வேப்ப இலைகள், எலுமிச்சை பழச்சாறு.

முதலில் புதினா இலைகளையும் வேப்ப இலைகளையும் தண்ணீரில் நன்றாக அலசி கழுவி கொள்ள வேண்டும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் இந்த 2 இலைகளைப் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறு ஊற்றி விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஃபேஸ் பேக் போடும் அளவிற்கு அரைத்துக் கொண்டால் போதும்.

pudina

ரொம்பவும் கொஞ்சமாக இலைகளை மிக்ஸியில் போட்டால் அரை படமல்தான் இருக்கும். ஒரு கைப்பிடி அளவு புதினா ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மீதம் இருப்பதை அடுத்தநாள் எல்லாம் எடுத்து வைத்து பயன்படுத்தவே கூடாது. இந்த ரிமிடியை பொருத்தவரை அப்பவே அரைத்து, அப்பவே முகத்தில் போட்டுக் கொள்வதுதான் நன்மையை கொடுக்கும். பேஸ்ட் போல் அரைத்த இந்த விழுதை, முகம் முழுவதும் மாஸ்க் போல அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்பை பின்பற்ற தொடங்கிய 3 நாட்களில் நிச்சயமாக உங்களுக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து 90 நாட்கள் இதை உங்களுடைய முகத்தில் போட்டு வர வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். இந்த பேஸ்டை முகத்தில் போட்டுக் கொண்டு 30 நிமிடங்கள் கழித்து, அதன் பின்பு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விட வேண்டும்.

face8

முகத்தில் முகப்பரு பிரச்சனை, குட்டி குட்டி கொப்பள பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் இதை முகத்தில் போட்டு வரலாம். சருமத்தில் வேறு எந்த பிரச்சனை பிரச்சனை உள்ளவர்களும் இதை தினம்தோறும் போட்டு வரலாம். முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை இனி எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் வாரம் ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றலாம். டிரை ஸ்கின், ஆயில் ஸ்கின் எப்படிப்பட்ட ஸ்கின் டோன் இருந்தாலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. 100% ரிசல்ட் நிச்சயம். ட்ரை பண்ணி பாருங்க!