இன்றைய காலக்கட்டத்தில் உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமுமே ஏதாவது ஒரு ரசாயனம் கலந்த பொருளை தேய்த்து கொள்கிறார்கள். இதன் மூலம் தற்காலிகமாக உதடு சிவப்பாக தெரியுமே அன்றி நிரந்தரமாக உதட்டின் நிறம் மாறாது. உடலின் நிறம் எப்படி இருந்தாலும் உடலில் நிறம் ஆனது சிகப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். இது சிகப்பு நிறத்தில் இல்லாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதை சரி செய்வதை விட்டு இது போல செய்யும் பொழுது நிரந்தர தீர்வு கிடைக்காது. இந்த அழகு குறிப்பு பதிவில் உதட்டை நிரந்தரமாக சிகப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முதலில் உதடு சிகப்பு நிறத்தில் இல்லாமல் போவதற்கான ஒரு சில காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம். சிலருக்கு உதடு வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே ஆகும். இதற்கு அதை அதிகரிப்பதற்கான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்த வழி.
அடுத்து ஒரு சிலருக்கு உதடு நீல நிறத்தில் இருக்கும். இது கொஞ்சம் பிரச்சனை கூறிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் பொழுது உதட்டினீ நிறம் நீல நிறமாக மாறும். இது போல உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாக கருதப்படுகிறது.
உதடு கருமை நிறத்தில் இருப்பது அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. இது ஆண்கள் பெண்கள் இருவருமே சந்திக்க கூடியது தான். ஆண்களுக்கு பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படுகிறது. பெண்களுக்கு இது வருவதற்கு காரணம் போதிய அளவு தண்ணீர், உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்து இல்லாமல் போவது, அதிக அளவில் வெயிலில் இருப்பது, உதடுக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.
கருமை நிறத்திலான உதட்டை சிவப்பாக மாற்ற
இப்படி கறுத்துப் போன உதட்டை சிவப்பாக மாற்ற ஆண் பெண் இருவருமே இரவில் உறங்கும் பொழுது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து உதட்டின் மேல் ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்து விட்டு அப்படியே உறங்கி விட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்யும் போது உதட்டின் மேல் படிந்த கருமை நிறம் நீங்கி விடும். பகல் நேரத்தில் பீட்ரூட்டின் சாறை கொஞ்சமாக எடுத்து உதட்டில் தேய்த்து இரண்டு நிமிடம் வரை மசாஜ் செய்த பின்பு அரைமணி நேரம் வரை அப்படியே விட்டு அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்து விட வேண்டும். இதையும் தொடர்ந்து செய்யும் போது உடலின் நிறம் நிச்சயம் சிகப்பாக மாறும்.
இதையும் படிக்கலாமே: மூன்றே நாளில் முடி காடு போல வளர கிடுகிடுவென வளர இந்த அதிசய பேக்கை ட்ரை பண்ணுங்க. அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்.
உதடு சிவப்பாக மாற மேல் பூச்சாக நாம் என்ன செய்து கொண்டாலும் உணவின் வழியும் சில ஊட்டச்சத்துகளை கொடுக்க வேண்டும். அதற்கு சத்து நிறைந்த பழங்கள் பீட்ரூட் போன்றவற்றை எடுக்க வேண்டும். மேலும் தேவையான அளவு தண்ணீரை பருக வேண்டும். இவற்றை செய்யும் போது தான் அதற்கான முழு பலன் நமக்கு கிடைக்கும். இந்த குறிப்பில் உள்ள இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும் கருமை படிந்த உதடு சிகப்பாக மாறி விடும்.