ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவது வறுமைதான். அந்த வறுமை என்பது ஏற்படுவதால் தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் அந்த கடன் பிரச்சினையால்தான் பலவிதமான பிரச்சனைகளும் உண்டாகிறது. இதோடு மிக முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் நோய். வறுமை நீங்க வேண்டும் என்றால் நாம் அதிகளவில் சம்பாதிக்க வேண்டும் அப்படி சம்பாதிக்கும் பட்சத்தில் வறுமை நீங்கிவிடும். ஆனால் நோய் நீங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் பெரிதும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய நந்தீஸ்வரர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நந்தீஸ்வரர் வழிபாடு
சிவபெருமானின் கனபூதங்களில் ஒருவராக திகழக்கூடியவர் தான் நந்தீஸ்வரர். நந்தீஸ்வரரின் அனுமதி இல்லாமல் சிவபெருமானை நம்மால் வழிபாடு செய்ய முடியாது என்றும் அதையும் மீறி வழிபாடு செய்தாலும் அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. அனைத்து விதமான சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு முன்பாக நந்தீஸ்வரர் கண்டிப்பாக முறையில் இருப்பார். அப்படிப்பட்ட நந்தீஸ்வரரை நாம் வழிபாடு செய்துவிட்டு தான் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை அப்படியே நந்தீஸ்வரருக்கும் தருவார்கள். அதேபோல் அபிஷேகங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு நந்தீஸ்வரரின் மேல் சிவபெருமானும் பார்வதி தேவியும் அமர்ந்து அந்த கோவிலை சுற்றி வருவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்திஸ்வரரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக நாம் மேற் சொன்ன வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, நோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.
இதற்கு நாம் சிவாலயத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாக கூட இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த மந்திரத்தை கூறி நந்தீஸ்வரரை வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்களுடைய பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நந்தீஸ்வரரின் காயத்ரி மந்திரத்தை தங்களால் இயன்றது குறைந்தபட்சம் 11 ல் இருந்து அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பிரதோஷம் வரும் நாளில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் வாங்கி கொடுத்த அருகம்புல்லை சாற்றி இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதற்குரிய பலன் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாமே: செல்வம் சேர தன திரியோதசி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்
நந்தீஸ்வரரின் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நீங்குவதோடு நோய் நொடிகள் எதுவும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நேரில் செய்து கொள்கிறோம்.