பிரண்டையுடன் இதையும் சேர்த்து அரைத்து பாருங்க. பிரண்டையே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த முறையில் செய்யும் போது கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி வாரம் ஒரு முறை அரைத்து சாப்பிட்டு பாருங்க எலும்பு பிரச்சனை கிட்ட கூட வராது.

- Advertisement -

இப்போதெல்லாம் நாம் உணவு என்பதை பசி, ருசிக்கு என சாப்பிடும் காலக்கட்டம் எல்லாம் மாறி ஏதோ ஒன்று சாப்பிட்டோம் என மாறி விட்டது. அதில் ஆரோக்கியம் என்ற பேச்சு அடியோடு இல்லாமலே போய் விட்டது. அதனால் தான் இன்றைய தலைமுறையினர் சிறு வயதில் முதலே அதிகப்படியான பிரச்சனைகளை சமாளிக்கிறார்கள். அதிலும் இந்த எலும்பு சம்பந்தமான பிரச்சனை இப்போதுள்ள அனைவருக்கும் இருக்கிறது. இந்த பிரண்டை எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்து. அதை அப்படியே செய்து கொடுத்தால் குழந்தைகளும் சாப்பிட மாட்டார்கள். இந்த முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். இது பிரண்டை துவையல் என்று சொன்னால் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு சுகப்பிரமாதமாக இருக்கும் அதை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பிரண்டை – 1/4 கப், நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 5, கருவேப்பிலை – 1/4 கப், கொத்தமல்லி – 1/4 கப், புதினா – 1/4 கப், துருவிய தேங்காய் – 1/4 கப், பூண்டு – 2 பல், இஞ்சி – 1 துண்டு, புளி – சிறிய கொட்டைப்பாக்கு அளவு, உப்பு – 1/2 டீஸ்பூன்,

- Advertisement -

செய்முறை

முதலில் பிரண்டையை எடுத்து அதில் நான்கு புறமும் மெலிதாக நார் இருக்கும் அதை உரித்து எடுத்துக் கொண்டு தண்ணீரில் அலசி விடுங்கள். (பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இது சற்று விறு விறு என்று இருக்கும்).

அதே போல புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் காம்பு நீக்கி சுத்தம் செய்து அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இந்த பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக பச்சை நிறம் மாறி வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் மீதம் இருக்கும் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு சற்று நிறம் மாறியவுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, தேங்காய்,புளி சேர்த்து லேசாக எண்ணெயில் வறுத்து எடுத்து தனியாக ஆற வைத்து விடுங்கள்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றாமல் இதில் கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி போட்டு அதன் பச்சை வாடை போகும் வரை லேசாக பிரட்டி எடுத்து விடுங்கள். முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய், உளுத்தம் பருப்பு வறுத்த கலவை போட்டு ஒரு சுற்று விட்டு எடுத்த பிறகு பிரண்டையை அதில் போட்டு அதுவும் பாதி அளவு அரைபட்டதும், இத்துடன் வதக்கி வைத்துள்ள கருவேப்பிலை,கொத்துமல்லி, புதினா, தழைகளையும் போட்டு இத்துடன் சேர்த்து அரைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த மாதிரி ஒரு முறை மாங்காய் ஊறுகாய் செஞ்சி பாருங்க. ஊறுகாயே பிடிக்காதவர்களுக்கு கூட இது இல்லாமல் சாப்பாடு இறங்காது என்று சொல்லும் அளவிற்கு எல்லோரும் ருசித்து சாப்பிடுவார்கள்

இந்தப் பிரண்டைத் துவையல் எப்போதும் போல் இல்லாமல் இதில் புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை எல்லாம் அதிகப்படியாக சேர்த்து செய்திருப்பதால் அனைத்தும் சத்தும் நமக்கு கிடைப்பதுடன், ருசியும் பிரமாதமாக இருக்கும். இந்தத் துவையலை சுடச்சுட சாதத்துடன் வைத்து சாப்பிடும் போது பிரமாதமாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -