இனி மீண்டும் சேரவே முடியாது என்று நினைத்த தம்பதியினர் கூட, இந்த பொருளை சேர்த்து வைத்தால் மீண்டும் சேர்ந்து விடுவார்கள்.

- Advertisement -

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்று. மற்ற அனைத்து உறவுகளுக்கு இல்லாத ஒரு பிணைப்பும், பந்தமும் இந்த உறவுகளுக்குள் கட்டாயமாக இருக்கும் என்பதை விட, இருக்க வேண்டும் என்றே கூறலாம். அப்போது தான் இல்லறம் சிறப்பாக அமையும். பொதுவாக பிரிவிற்கான காரணங்களை தேடினால் தினந்தினம் ஆயிரம் காரணங்கள் நமக்கு கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் வாழ்வதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட இந்த உறவில் நல்ல முறையில் வாழ்வதால் நமக்கும் நல்ல படியாக வாழ்வதோடு இல்லாமல் அடுத்த சந்ததியினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து இந்த உறவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமையும்.

பொதுவாக பிரிய வேண்டும் என்று நினைத்து யாரும் திருமணம் செய்வதில்லை. ஏதோ சூழ்நிலை சந்தர்ப்பம் பிரிந்து விட்டார்கள் இப்போது பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும் சரி, அவர்களை பெற்றவர்கள் நினைத்தாலும் சரி அவர்கள் பயன்படுத்திய இந்த பொருட்களை மட்டும் ஒன்றாக வைத்திருந்தாலே போதும் நிச்சயம் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது ஆன்மீகத்தில் வலுவாக சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் கேட்டால் சற்று ஆச்சரியம் அதிர்ச்சியும் ஆகும் படியான ஒரு விஷயம் தான் அவர்களின் ஆடை தான். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஆம் பிரிந்த கணவன் மனைவி அவர்களின் ஆடைகளை ஒன்றாக மடித்து ஒன்றாகவே பீரோவில் வைக்க வேண்டும். அப்படி செய்தால் கட்டாயமாக அவர்கள் பிரியவே மாட்டார்கள். ஒரு வேளை பிரிந்து இருந்தால் இதற்கு முன் அவர்கள் பயன்படுத்தி ஆடைகளை இது போல் பயன்படுத்தும் போது அவர்கள் பிரிந்து இருந்தாலும் கட்டாயமாக சேர்ந்து விடுவார்கள். நம் திருமணங்களின் போது கணவன் மனைவி இருவரின் துணியையும் ஒன்றாக முடிச்சு போடுவதும் இந்த தாந்த்ரகத்தை முன் வைத்து தான். ஒருவரோடு ஒருவர் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதின் அடையாளம் தான் இது.

முன்பெல்லாம் நம் வீடுகளில் துணிகளை துவைக்கும் போது கணவன், மனைவி, குழந்தை இப்படி அனைவரின் துணியும் ஒன்றாகவே ஊற வைத்து, துவைத்து காய வைப்பார்கள். இதற்கு காரணம் இந்த துணிகள் இப்படி ஒன்றோடு ஒன்று ஒட்டி இருப்பதைப் போலவே நம் குடும்பத்திலும் கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

- Advertisement -

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் அப்படி கிடையாது குழந்தைகள் துணியை தனியாக மனைவி துணி கணவர் தனித்தனியாக ஊற வைத்து தனித்தனியாக துவைக்கும் பழக்கம் வந்து விட்டது. இது சௌகரியத்திற்கு வேண்டுமானால் இதைப் போல் செய்து கொள்ளலாம். ஆனால் குடும்பத்தின் ஒற்றுமைக்கு இது போன்று முறைகளை பின்பற்றுவது சரியல்ல. இப்படி செய்வதின் மூலம் கணவன் மனைவி இருவரின் வாசமும் ஒருவருக்கு ஒருவருர் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியமான ஒன்று.

இப்படி பிரிந்திருக்கும் கணவன் மனைவி இவர்களின் திருமணம் முகூர்த்த புடவை, பட்டுச்சட்டை, பட்டுவேஷ்டி, பட்டுப்புடவை இவைகளை ஒன்றாக ஒரு பையில் போட்டு வைத்து விடுங்கள். முகூர்த்த புடவை என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. அதை எந்த காரணம் கொண்டும் அலட்சியம் செய்ய கூடாது. சரி இப்படி எதுவும் இல்லை என்றால் இரண்டு பேரின் சின்ன கை குட்டையாக இருந்தாலும் கூட பரவாயில்லை அதை ஒன்றாக மடித்து உங்கள் பீரோவில் ஒரு துணிக்குள் மற்றொரு துணி வரும் படித்து வைத்து விடுங்கள். வைத்த பிறகு உங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதார வேண்டி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இந்த 1 செடி இருந்தால் வறுமை என்பதே இருக்காதாம்! மேலும் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்தச் செடியிலிருந்து இதை செய்தால் மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்குமாம் தெரியுமா?

இந்த பரிகாரத்தில் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது எந்த வித ஐயப்பாடும் இல்லை. சில வழிகளை பின்பற்றும் போது வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால் நம் முன்னோர்கள் எதையும் வேடிக்கையாக செய்யவில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் இதை செய்யுங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -