நாளைய தினம் சித்திரை மாத அமாவாசை திதி, ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. பித்ரு காரகனாக சொல்லப்படுவது சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரிய கிழமை ஞாயிற்றுக்கிழமை. ஆக நாளைய தினம் சூரிய பகவானை வணங்கும்போது பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலக, இந்த ஒரு மந்திரம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.
நாளைய தினம் சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. சூரிய உதயத்தின் போது சூரிய பகவனை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தாய் தந்தை இல்லாதவர்கள், முன்னோர்கள் வழிபாடு செய்யும் நபர், ஆண்கள்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலையிலேயே எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளித்து விட வேண்டும். குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு குளிப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். இப்படி கல் உப்பு கலந்த தண்ணீரில் குளிக்கும் போது முன்னோர்கள் வழிபாடு தடைபடக்கூடாது.
மாதம் தோறும் அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபாடு செய்ய இறைவன் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குளியலை மேற்கொள்ளுங்கள். பிறகு இடுப்பில் கட்டிக் கொண்டிருக்கும் ஈரத்துண்டோடு கிழக்கு நோக்கி நிற்க வேண்டும். மொட்டை மாடி, பால்கனி எந்த இடத்தில் உங்களுக்கு சூரிய உதயம் தெரியுமோ, அந்த இடத்தில் நின்று கொண்டு கொஞ்சம் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் போது, உதிக்கின்ற ஆரஞ்சு நிற சூரியனை பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
பித்ரு சாபம் நீங்க மந்திரம்
ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம், சஹ சிவ சூரியாய
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா
மந்திரத்தை தினமுமே காலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சொல்லி வர, பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலக இந்த மந்திரம் உங்களுக்கு உதவி செய்யும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சேர்ந்து வந்திருக்கும் சித்திரை மாதம் அமாவாசை நாள் அன்று, அதாவது நாளைய தினம் 27-05-2025 இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு அதி அற்புதம் வாய்ந்த பலனை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: சித்திரை அமாவாசை பித்ரு சாபம் விலக பரிகாரம்
காரணம் இந்த நாள் சக்தி வாய்ந்தது. முன்னோர்களுக்கு உரிய, பித்ரு காரகனாக சொல்லப்படும் சூரியனுக்கு உறிய ஞாயிற்றுக்கிழமை நாள் என்பதால் நாளைய தினத்தில் இந்த மந்திரத்தை சொன்னால், லட்சம் முறை இந்த மந்திரத்தை சொன்னதற்கு சமம். நாளைய தினம் மூன்று முறை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலையை துவங்குங்கள். நாளைக்கு காலை இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் உண்மையாகவே பாக்கியசாலிகள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.