மசாலாக்களின் வாசம் இல்லாமல் பாய் வீடுகளில் உதிரி உதிரியான பிளேன் பிரியாணி செய்வது உண்டு. இதை குஸ்கா என்பார்கள். கறி எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் இந்த பிளைன் பிரியாணி கொஞ்சம் கூட அடிப்பிடிக்காமல், குழைந்து போகாமல் சரியான பதத்தில் வெந்து வருவதற்கு எந்தெந்த அளவுகளில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும்? உதிரி உதிரியான பிளைன் பிரியாணி செய்வதற்கு வழிமுறை என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்
பிளைன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – இரண்டு டீஸ்பூன், ரெண்டு – பட்டை, பிரிஞ்சி இலை – ஒன்று, 10 – கிராம்பு, 10 – ஏலக்காய், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன், இரண்டு – பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் – தனியாத்தூள், பழுத்த தக்காளி பழம் – 2, கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி, புதினா இலைகள் – அரை கைப்பிடி, தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன், பாஸ்மதி அரிசி – இரண்டு ஆழாக்கு, தண்ணீர் மூன்று – ஆழாக்கு, உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்.
பிளைன் பிரியாணி செய்முறை விளக்கம்:
இந்தப் பிளைன் பிரியாணி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆழாக்கு பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும். மெல்லியதாக நீளவாக்கில் வெங்காயம் மற்றும் தக்காளி பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்கப் போவதில்லை.
குக்கர் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய விடுங்கள். நெய் சேர்த்தால் குஸ்கா நன்கு மணமாக இருக்கும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை இவற்றை மட்டும் மேற்கூறிய அளவுகளின் படி சேர்த்து லேசாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சுருள வதங்க விடுங்கள். வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதங்கி வரும் சமயத்தில், பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக கொஞ்சம் போல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி பழங்களுடன் வெட்டி வைத்துள்ள புதினா மற்றும் மல்லி தழைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி மசியும் பொழுதே எண்ணெய் பிரிந்து மேலே தெளியும். இந்த சமயத்தில் கெட்டியான தயிரை சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் லெமன் சூஸ் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் ஒரு ஆழாக்கு பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை ஆழாக்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் மூன்று ஆழாக்கு தண்ணீர் இப்போது சேர்க்க இருக்கிறோம். குக்கர் அல்லாமல் பாத்திரத்தில் செய்பவர்கள் கூடுதலாக ஒரு ஆழாக்கு தண்ணீர் சேர்த்தால் சரியாக வரும்.
இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு ஊறுகாய் சாப்பிட்டால் கருகருவென முடி வளரவும், மூட்டு வலி, முழங்கால் வலி, கண் பார்வை கோளாறு ஏற்படாமல் இருக்கவும் செய்யுமாம் தெரியுமா? 1 ஸ்பூன் ஊறுகாயில் இவ்வளவு பலன்களா?
பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதில் உப்பு, காரம் எல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உப்பு ஒரு பின்ச் தூக்கலாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் சாதம் வெந்து வரும்போது சரியாக இருக்கும். இப்போது குக்கரை மூடி ஹை ஃப்ளேமில் வைத்து இரண்டு விசில் மட்டும் விட்டு பிரஷர் முழுவதும் இறங்கியதும் திறந்து பாருங்கள், கமகமன்னு வாசமாக நல்ல ஒரு பிளைன் பிரியாணி ரெசிபி கொஞ்சம் கூட அடிபிடிக்காமல், குழைந்து போகாமல் உதிரி உதிரியாக சரியான அளவில் வெந்து வந்திருக்கும். இதன் சுவையும் அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் இதே அளவுகளில் ட்ரை பண்ணி பாருங்க அசத்திடுங்க.