புதுவிதமான மோர் குழம்பு! காய் சேர்க்காமல் ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்.

plain-morkuzhambu
- Advertisement -

மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. காய் சேர்க்காமல், சுலபமான முறையில் மோர் குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் இப்போது தான் சமைக்க தொடங்கியவர்களாக இருந்தாலும் கூட, இந்த மோர் குழம்பை சுலபமாக, சுவையாக செய்து அசத்தி விடலாம். மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்த்துவிடலாமா?

mor-kuzhambu1

Step 1:
கலவை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
கெட்டித்தயிர் – 1/2 லிட்டர், ஊற வைத்த துவரம் பருப்பு – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சிறிய துண்டு இஞ்சி – பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 4, தேவையான அளவு உப்பு.

- Advertisement -

முதலில் கெட்டித் தயிரை மத்து வைத்து, நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அதாவது தயிர் உருண்டை உருண்டையாக இருக்கக் கூடாது. தயிரை தண்ணீர் ஊற்றி கரைக்கக் கூடாது. ரொம்பவும் புளிப்புத்தன்மை கொண்டதாகவும் இருக்கக்கூடாது. அடுத்ததாக, ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்த துவரம் பருப்பு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்து எடுத்து, தயார் செய்து வைத்திருக்கும் தயிரில் போட்டு கலந்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி, அந்த தண்ணீரை கொஞ்சம் கெட்டி தயிரோடு சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

thayir-kadaithal

Step 2:
இப்போது அடுப்பில் அகலமான கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் கடுகு, 4 வரை மிளகாய்(2ஆக கிள்ளி தாளிக்க வேண்டும்), மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சின்ன வெங்காயம் 10, பெருங்காயம் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, இவைகளை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கி, அதன்பின்பு நீங்கள் தயாராக வைத்திருக்கும் தயிர் கலவையை இதில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

இந்த இடத்தில் தயிர் ரொம்பவும் கெட்டியான பதத்தில் இருந்தால், தேவைப்பட்டால் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, நான்கிலிருந்து ஆறு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

morukulambu

அதாவது மோர்க் குழம்பில் பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்க வைத்தால் போதும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார். மோர் குழம்பை, சூட்டோடு மூடி விடக்கூடாது. கொஞ்சம் ஆறிய பின்பு மூடவேண்டும். சூட்டோடு மூடிவிட்டால் மோர்க்குழம்பு நீர்த்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
இந்த பொருளை மட்டும் சப்பாத்திக்குள் ஒளித்து வைத்துக் கொடுத்தால், உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு எத்தனை சப்பாத்தி இருந்தாலும் பத்தவே பத்தாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -