நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் செடிகளின் இலைகள் மற்றும் பூக்கள் அடர்த்தியான நிறம் பெற இந்த 2 பொருள் போதுமே! இலைகள் மஞ்சளாக மாறினால் கட்டாயம் இதை செய்யுங்கள்!

rose-plant-yellow-orange-peel

நாம் நம்முடைய வீட்டில் பூச்செடிகளை விரும்பி வளர்ப்பது உண்டு. பூச்செடிகளை பெருமளவு சரியாக பராமரிக்காவிட்டால் கட்டாயம் அவைகள் வாடி விடக்கூடிய ஆபத்து உண்டு. பூச்செடிகள் சரியான சத்துக்கள் பெறாமல் இருந்தால் அதனுடைய இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி விடுவது உண்டு. அதிலிருந்து பூக்க பெரும் பூக்களும் அடர்த்தியான நிறம் இல்லாமல் நிறம் மங்கி காணப்படும். இவ்வகையான பிரச்சனையை தீர்ப்பதற்கு நம் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி எளிதாக உரம் தயாரிக்கலாம். அது எப்படி தயாரிப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

yellow-leaf

மனிதனுக்கு மட்டும் அல்ல, செடிகளுக்கும் பொதுவாக தேவைப்படும் ஒரு சத்து என்றால் அது கால்சியம் சத்து தான். கால்சியம் சத்து குறைந்தால் அதனுடன் சேர்ந்து இரும்பு சத்து மற்றும் நைட்ரஜன் சத்தும் குறைந்து விடுகிறது. இதனால் செடிகளின் இலைகள் அதன் பசுமை தன்மையை இழக்கின்றன என்று தான் கூற வேண்டும். இலைகள் தன் பசுமையை இழக்கும் பொழுது அதிலிருந்து பூக்கும் பூக்கள் நிறம் குறைவாக பூக்கிறது.

வீட்டில் இருக்கும் சிட்ரஸ் சத்து அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழ தோல் மற்றும் எலுமிச்சை பழத்தோல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் நன்கு வெயிலில் காய வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் பயன்படுத்திய முட்டை ஓடுகளை கால்சியம் சத்துக்காக ஈரப்பதம் இன்றி நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் உரமாகி மண்ணுடன் சேர்ந்து வேதி வினை புரியும் பொழுது கால்சியம் சத்து கிடைக்கும். கால்சியம் சத்து கிடைக்கும் பொழுது அதனுடன் இரும்பு சத்து மற்றும் நைட்ரஜன் சத்தும் தூண்டிவிடப்படும்.

7-leaves-rose-plant

இதனால் மண்ணில் இருக்கும் வேர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க பெற்று அதிலிருந்து தோன்றும் புதிய இலைகள் பச்சை பசேலென பசுமை தன்மையோடு துளிர்க்க ஆரம்பிக்கும். ஏற்கனவே மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அவைகள் உதிர்ந்து மீண்டும் துளிரும் இலைகள் செழிப்பாக துளிர் விடும். பிறகு அதில் இருந்து பூக்கும் பூக்கள் அடர்த்தியான நிறம் பெற்று, பெரிதாக பூக்கள் பூக்கும். குறிப்பாக ரோஜா போன்ற அதிக நிறம் தரும் பூக்களை கொடுக்கும் செடிகளுக்கு இந்த உரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உலர்த்தி எடுக்கப்பட்ட ஆரஞ்சு தோல்களை தனியாகவும், முட்டை ஓடுகளை தனியாகவும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 500 கிராம் ஆரஞ்சுப் பழ தோல்களுக்கு, 300 கிராம் அளவிற்கு முட்டை ஓடுகள் எடுத்தால் போதுமானது. இந்த பொடியை நன்கு உலர்த்தி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் போதும்.

வாரம் இரண்டு முறை உங்களுடைய ரோஜா போன்ற பூச்செடிகளுக்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு வேர் பகுதியை சுற்றிலும் தூவி விட்டுவிட்டால் போதும். இலைகள் மஞ்சள் தன்மையை அடையாமல் பாதுகாப்பாகவும், செழிப்பாக வளர ஆரம்பித்துவிடும். பூச்செடிகள் அடர்த்தியான நிறம் கொடுக்கும் பொழுது தான் பார்ப்பதற்கே கண்களை கவரும் வண்ணம் இருக்கும். நிறம் மங்கினால் பயன் தராமல் போய்விடும். எனவே உங்கள் வீடு செடிகளின் இலைகள் நிறம் மாறும் பொழுதே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.