பொலிவான முகத்தைப் பெற அழகு குறிப்பு

glowing skin tips
- Advertisement -

முகம் எந்தளவிற்கு பொலிவாக இருக்கிறதோ? அந்த அளவிற்கு நமக்கு தன்னம்பிக்கை என்பது அதிகரிக்கும். நம்முடைய முகம் பொலிவாக இருந்தால் பிறர் நம்மை பார்க்கும் பார்வையும் வித்தியாசமாக இருக்கும். அதனால்தான் பலரும் இன்றைய காலத்தில் வெளியில் செல்லும் பொழுது முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதற்காக பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்திச் செல்கிறார்கள். அதனால் பக்க விளைவுகள் உண்டாகும்.

அதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்கள் நம்மிடம் இருந்தால் போதும். அந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை என்றும் பொலிவுடன் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். அந்த பொருட்களை பற்றியும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ரோஸ் வாட்டரை நம் முகத்தில் ஸ்பிரே செய்யும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அழிந்து விடும். நம் முகத்தில் உள்ள அந்த சிறு சிறு ஓட்டைகள் ஆனது இறுக்கம் கொடுக்கும். ரோஸ் வாட்டர் நம் முகத்தில் ஒரு தடவை ஸ்ப்ரே பண்ணிவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் ஸ்ப்ரே செய்து ஐந்து நிமிடம் உலர வைக்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது நம் முகத்தை மாய்சுரஸ்சாக வைத்துக் கொள்ளும்.

அரிசி கழுவும் தண்ணீரை எல்லாரும் என்ன செய்வோம்? கீழே ஊற்றி விடுவோம் அல்லவா? அதில் அவ்வளவு மகத்துவம் உள்ளது. நாம் கீழே ஊற்றுவதற்கு பதிலாக அதை எடுத்து நம் தலையில் தேய்க்கும் பொழுது தலைமுடி உறுதியாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரக்கூடும். அதேபோல அரிசியை மூன்று தடவை கழுவி பின் நான்காவது தடவை கழுவும் பொழுது அந்த அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் காட்டன் பஞ்சை நனைத்து நம் முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

- Advertisement -

இயற்கையாகவே உள்ள சோற்றுக்கற்றாழையை எடுத்து அதில் உள்ள சோற்றுப்பகுதியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் ரோஜா இதழ்கள் பவுடர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். நன்றாக கலக்கிய பிறகு ஒரு பிரஷை எடுத்து அதை நம் முகத்தில் அனைத்து இடங்களிலும் தடவிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக கண்ணுக்கு அடியில் கருவளையம் இருந்தால் இந்த பேக்கை தடவி வர கருவளையம் நீங்கி முகம் பொலிவு பெறும். இந்த பேக்கை 15 நிமிடம் ஊற வைத்த பிறகு ஒரு காட்டன் பஞ்சை எடுத்து தண்ணீரில் நனைத்து துடைத்து எடுக்கவும். துடைத்து எடுத்த பின் பார்த்தால் கண்ணாடி போன்ற முகம் பொலிவு பெறும்.

இதையும் படிக்கலாமே அசுர வேகத்தில் முடி வளர்ச்சியை தரும் ஹேர் மாஸ்க்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இயற்கையிலேயே நம்முடைய முகம் பொலிவாகவும், அழகாகவும், நிறமாகவும் மாறும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -