அம்பாள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். பொன் பொருள் ஆபரணம் சொத்து சுகம் எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் உங்கள் வீடு தேடி வரும்.

amman
- Advertisement -

பொன் பொருள் ஆபரணம் சொத்து சுகம் நம் வீடு தேடி வரும் போது யாராவது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுவோமா. ஐஸ்வரிய லட்சுமியை நிச்சயமாக மனம் விரும்பி வீட்டிற்குள் வரவேற்போம். இன்றைய சூழ்நிலையில் ஒரு பொட்டு தங்கம் வாங்குவது என்பது அவ்வளவு கஷ்டமான ஒரு விஷயமாக உள்ளது. காரணம் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல விசேஷம் வைத்து விட்டால் என்ன செய்வது. புதியதாக தங்கம் வாங்கித் தானே ஆகவேண்டும். உதாரணத்திற்கு பிள்ளைகளுக்கு காது குத்துவது, பிள்ளைகளுக்கு திருமணம் வைப்பது, அல்லது நிச்சயதார்த்தம் அல்லது சொந்த பந்தங்களுக்கு சீர் செய்ய வேண்டும் என்றால் அதில் முன்னிலையில் நிற்பது இந்த தங்கம் தான்.

தங்கம் மட்டும் என்று இல்லாமல் நம்முடைய வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருள் சேர்க்கை இருக்க வேண்டும் என்றாலும் நமக்கு ஒரு யோகம் இருக்க வேண்டும். அந்த யோகத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள என்ன வழிபாட்டு முறையை மேற்கொள்வது. ரொம்ப ரொம்ப சுலபமான வழிபாட்டுமுறை இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டின் அருகில் கட்டாயமாக ஏதாவது ஒரு அம்பாள் கோவில் இருக்கும்.

- Advertisement -

தனியாக அம்பாளுக்கு கோவில் இருந்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் சிவன் கோவிலில் இருக்கும் அம்மனாக இருந்தாலும் சரி, பெருமாள் கோவிலில் இருக்கும் அம்பாளாக இருந்தாலும் சரி, எந்த அம்மனுக்கும் இந்த பொருட்களை நாம் தானமாக வாங்கி கொடுக்கலாம். மாதம் தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சிவப்பு நிற குங்குமம், சிவப்பு நிற வளையல், சிவப்பு நிற புடவை, சிவப்பு நிற ரவிக்கை துணி, இப்படி இந்த பொருட்களில் உங்களால் எதை வாங்கிக் கொடுக்க முடியுமோ அதை வாங்கி அம்பாள் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து கொண்டு, அந்த பொருட்களை யாருக்காவது தானம் கொடுக்கலாம்.

புடவையாக இருந்தால் அதை அம்பாளுக்கு சாத்திவிடுவார்கள். வளையல் ஆக இருந்தால் அம்பாளுக்கு மாலை கட்டிப் போட்டு அந்த மலையிலிருந்து வளையலை வாங்கி கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தானமாக கொடுத்து விடலாம். ரவிக்கைத் துணியும் வாங்கி அங்கு வரக்கூடிய பெண்களுக்கு தானமாக கொடுத்து விடலாம். குங்குமத்தை அர்ச்சகரிடம் கொடுத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கும் படி சொல்லி விடலாம். (இது அத்தனையையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. இதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொடுத்தால் கூட போதுமானது தான்.)

- Advertisement -

இப்படியாக மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் இந்த தானத்தை வீட்டில் இருக்கும் பெண்களுடைய கையால், அம்மன் கோவிலுக்கு தானம் செய்தால் அந்த வீட்டில் பொன் பொருள் சொத்து சுகம் ஆடை ஆபரணங்கள் சேர்க்கை இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் நம்பிக்கை.

குறிப்பாக உங்களுடைய வீட்டின் அருகில் சொர்ணாம்பிகை அம்பாள் இருந்தால் இன்னும் சிறப்பு. சுவர்ணாம்பிகைக்கு நீங்கள் எந்த அளவிற்கு வளையல் குங்குமம் தானம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் நீங்கள் வாங்கிய பொருட்களை வைக்க இடம் பத்தாமல் போகும்.

- Advertisement -