பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது!

lashmikuberar

பூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.

poojai

தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர உண்மை என்றாலும் அவற்றை அனுதினமும் கடைபிடிக்க முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள் வீட்டிலும் மகாலட்சுமி வாசம் செய்ய என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க பழகுங்கள். எவ்வளவு சீக்கிரம் காலை வேலையில் நீங்கள் எழுந்து கொள்கிறீர்களோ! அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய அன்றாட பணிகள் நிறைவுறும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல் இரவு நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்தாலே பாதி நேரம் உங்களுக்கு மிச்சம் ஆகிவிடும். சீக்கிரம் தூங்கவும், சீக்கிரம் எழவும் உங்களால் முடியும் என்றால், எதையும் சாதிக்க நிச்சயம் உங்களால் முடியும் என்பது தான் உண்மை. இதையே உங்களால் சரியாக செய்ய முடியவில்லை என்றால், வேறு எதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

sleep

மன அழுத்தம் காரணமாக நிறைய பேர் சரியாக தூங்காமல் குழப்பங்களோடு அன்றைய பொழுதை உற்சாகம் இல்லாமல் கடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பூஜை அறையை வாரம் ஒரு முறை பூஜை செய்தாலும் இந்த 3 விஷயங்களை கடைபிடித்து வந்தாலே நிச்சயம் உங்கள் வீட்டிலும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படமும், குபேரன் படமும் இல்லை என்றால் முதலில் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க குபேர விளக்கை குபேரனுக்கு வடக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் விளக்கை கிழக்கு நோக்கியும் ஏற்றி வையுங்கள். அந்த விளக்கிற்கு பக்கத்தில் சிறிய மண் பானை ஒன்றை வைத்து அதில் ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு நிரப்பி வையுங்கள். இவ்வாறு செய்வதால் வீட்டில் பண தடை ஏற்படாது.

kubera-vilaku-pooja

உங்கள் வீட்டு பூஜை அறையில் ராமர் ஜாதகம் மற்றும் ஹனுமன் படத்தை கட்டாயம் வையுங்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு கஷ்ட காலம் வருகிறதோ அப்போதெல்லாம் அந்த அனுமர் படத்திற்கு வால் பகுதியில் ஒவ்வொரு பூஜையின் பொழுதும் மேலிருந்து வாலின் நுனிப்பகுதி வரை குங்குமம் வைத்து வாருங்கள். நீங்கள் நுனி பகுதிக்கு வருவதற்குள் உங்களுடைய பிரச்சனைகள் நிச்சயம் தீர்ந்துவிடும்.

ramar-jathagam

நீங்கள் விளக்கு ஏற்றுவதற்கு முன் அந்த விளக்குக்கு அடியில் ஹிருதயகமலம் என்று கூறப்படும் கோலத்தை போட்டு விட்டு அதன் மேல் விளக்கு ஏற்ற தட்டு வைத்து அந்த தட்டில் நீங்கள் சமைக்க பயன்படுத்தும் அரிசியைப் போட்டு வைக்க வேண்டும். விளக்கிற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பின்னர் விளக்கேற்ற வேண்டும்.

hridaya-kamalam-kolam1

விளக்கு ஜோதி எரியும் இடத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கக் கூடாது. இவ்வாறு நீங்கள் பூஜை செய்யும் பொழுது கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டிலும் செல்வம் கொழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இறைவழிபாட்டை தவிர உங்களுடைய பிரச்சனைகள் தீர வேறு வழியை தேட தேவையில்லை என்பதை கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம்! அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.