உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை இப்படி செய்யவே கூடாது. வீட்டில் தீராத கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

poojai-room
- Advertisement -

நம்முடைய வீட்டு பூஜை அறையில் நீண்டநாட்களாக வைத்து பூஜை செய்து வந்த சுவாமி படங்களில், சில படங்கள் மிகவும் பழையதாகி இருக்கும். அதாவது ஆண்டாண்டு காலமாக ஒரு சுவாமி படத்தை பராமரித்து வரும் போது, இயற்கையாகவே அந்த சுவாமி படம் பொலிவிழந்து பூஜையில் வைக்க முடியாதபடி மாறி விடும். அது இயற்கை தான். செல்லரித்து விடும் அப்படி இல்லை என்றால் கண்ணாடி உடைந்து விடும். உள்ளே இருக்கும் சுவாமியின் திருஉருவம் சரியாக தெரியாமல் மங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட சுவாமி படங்களை நாம் என்ன செய்வோம்?

poojai

நம்முடைய வீட்டில் இருந்து அப்படியே கொண்டு போய் ஏதாவது ஒரு கோவிலில் இருக்கக்கூடிய மரத்தினடியில் அப்படியே போட்டுவிட்டு வந்துவிடுவோம். சில பேர் எல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்கக்கூடிய மரத்தின் அடியில் கூட அப்படியே போட்டுவிட்டு வந்து விடுகிறார்கள். அந்த சுவாமி படங்கள் நீண்ட நாட்களாக அதே இடத்தில் இருந்து உடைந்து, பல பேர் காலில் மிதிபட்டு பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த தவறை நாம் செய்யவே கூடாது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் சுவாமி படங்கள் பழையதாகி விட்டாலும், அதற்குள் நிச்சயம் உயிர் இருக்கும். அந்த சுவாமி படத்திற்கு பதிலாக மற்றொரு சுவாமியின் திருவுருவப் படத்தை முதலில் புதியதாக வாங்க வேண்டும். அம்மன் படம் பழுதாகி இருந்தால், அதற்கு பதிலாக புதியதாக அம்மன் படத்தை வாங்கிக் கொள்ளுங்கள். விநாயகரின் படம் பழுதாகி விட்டால் புதிதாக மற்றொரு விநாயகரின் திருவுருவப் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

poojai

பழைய படத்தை பூஜை அறையில் இருந்து எடுப்பதற்கு முன்பு அந்த தெய்வத்திடம் முதலில் மனதார வேண்டுதலை வைக்க வேண்டும். ‘எங்களுடைய வீட்டு பூஜை அறையில் இத்தனை நாட்களாக இருந்து எங்களது குடும்பத்தை பார்த்துக்கொண்ட கடவுளாகிய உங்களை இனியும் தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழ்நிலை வந்துவிட்டது.’ என்றவாறு அந்த இறைவனிடம் மனதார உங்களது வேண்டுதலை வைத்து பழைய திருவுருவப் படத்தை பூஜை அறையில் இருந்து அகற்றிவிட வேண்டும்.

- Advertisement -

எந்த தெய்வத்தின் திரு உருவத்தை மாற்றி வைக்கிறீர்களோ அந்த தெய்வத் திருவுருவ பெயரை உச்சரித்து, புதியதாக வாங்கிய திருவுருவப்படத்தை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, ‘பழைய திருவுருவ படத்தில் இருந்த அந்த சுவாமியின் ஆத்மார்த்தமான அருள், இந்த புதிய படத்தில் வந்து அமர வேண்டும்’. என்று மனதார சொல்லி புதிய படத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

poojai arai

இப்படி மனதார வேண்டுதலை சொல்லி பழைய படத்தை நம் வீட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பழைய படத்தை எடுத்துவிட்டு, கண்ணாடியால் பிரேம் செய்த ஸ்வாமியின் திருவுருவ படமாக இருந்தால் கண்ணாடி மரக்கட்டைகள் இவைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, காகிதத்தில் இருக்கக்கூடிய வெறும் சுவாமியின் திருவுருவப் படத்தை மட்டும் ஒரு மஞ்சள் துணியில் மடித்து ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் சமுத்திரத்தில் விட்டுவிடலாம். இதுவே சரியான முறை.

எக்காரணத்தைக் கொண்டும் சுவாமியின் உடைந்த சிலையாக இருந்தாலும், உடைந்த திருவுருவ படமாக இருந்தாலும், அடுத்தவர்கள் கால்கள் மிதிபட கூடிய இடங்களில் அனாவசியமாக அப்படியே கொண்டுபோய் தூக்கிப் போட்டுவிட்டு செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

நீண்ட நாட்களாக உங்கள் வீட்டு பூஜை புனஸ்காரங்களை கிரஹித்க்கொண்ட அந்த சுவாமியின் திருவுருவ படத்தில் எப்போதுமே சக்தி நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வ சக்தியை நீங்களே கொண்டு போய் அவமதித்ததற்க்கு சமமாகிவிடும். ஆகவே, முடிந்த வரை இனி பழைய படங்களை அனாவசியமாக ஏதாவது ஒரு இடத்தில் தூங்கி போடும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். இது உங்களுடைய வீட்டிற்கு கஷ்டத்தை தருவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -