பூஜை அறையில் நாம் அலட்சியமாக செய்யும் இந்த ஒரு சிறு தவறு, நம் வீட்டிற்கு பெரிய கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். அது என்ன தவறு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

poojai

நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பூஜை, வழிபாட்டு முறைகளில் என்றுமே அலட்சியம் இருக்கக்கூடாது. நமக்கு தெரியாத அறியாத விஷயங்களில் தவறு நடப்பதில் பிரச்சினையில்லை. தெரிந்தே அறிந்தே, ஒரு சின்ன தவறை கூட பூஜையில் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜைக்குரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வரிசையில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் இன்றளவும் நாம் அறியாமல் செய்யக்கூடிய ஒரு சின்ன தவறை பற்றி தான், இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

தவறு என்று பார்த்தால் இது சிறிய தவறு தான். ஆனால், இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், பல நாள் செய்த பூஜையின் பலனை நீங்கள் ஒவ்வொரு முறையும் இழப்பதற்கு சமமாகவே சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே வாரத்தில் ஒருநாளாவது பூஜை பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதை வியாழக்கிழமைகளில் சுத்தம் செய்வது சிறப்பான ஒன்று. உங்கள் வீட்டில் பூஜைக்காக பயன்படுத்தும் தூபக்கால், விளக்கு, மணி, பஞ்ச பாத்திரம் இப்படிப்பட்ட பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களை எல்லாம், சுத்தம் செய்யும் போது எக்காரணத்தைக் கொண்டும் தரையில் வைக்கவே கூடாது.

ஒரு பித்தளை தாம்பூலத் தட்டை இதற்காகவே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இருந்து பூஜை பொருட்களை தாம்புல தட்டில் வைத்து எடுத்து வந்து, தாம்பூல தட்டில் வைத்து சுத்தம் செய்து கழுவி, மீண்டும் அந்த பொருட்களை ஒரு தட்டின் மீது அல்லது மேடையின் மீது தான் வைக்க வேண்டுமே தவிர, பூமாதேவி மேல் நேரடியாக வைக்கக் கூடாது. நீங்கள் செய்த பூஜை புனஸ்காரங்கள் நேர்மறை ஆற்றல் அனைத்தையும் பூமா தேவி ஈர்த்துக்கொள்ளும் தன்மை உடையவள்.

poojai-jamanam

ஆகையால் ஒவ்வொரு முறை நீங்கள் பூஜை பாத்திரங்களை தரையில் வைத்து எடுக்கும் போதும், பூஜைப் பொருட்களில் நீங்கள் உருவேற்றிய சக்தி அனைத்தையும் பூமாதேவி தேவிக்கு சமர்ப்பணம் ஆகிவிடும். ஒரு முறை தரையில் பூஜைப் பொருட்களை வைக்கும் போதும், நீங்கள் செய்த பூஜை புனஸ்காரங்களின் பலன்களை அந்த பொருட்கள் இழந்துவிடும்.

- Advertisement -

அதாவது, நம் வீட்டு பூஜை அறைக்கு பூஜை செய்ய, தேவையான பொருட்களை கடையில் இருந்தும் வாங்கும் போது எந்த ஒரு சக்தியும் இருக்காது. அதுவே நம் வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் தீபம் ஏற்றி, தூபம் காட்டி, இறைசக்தியை உருவேற்றி வைத்திருக்கும் பொருளுக்கு சக்தி என்பது அதிகம். அந்த சக்தியை ஒவ்வொரு முறையும் அந்த பொருள் இழக்கும். எப்போது? ஒவ்வொரு முறை அந்த பொருளை பூமியில் நேரடியாக வைக்கும் போது!

poojai

அப்போது பாரம்பரியமாக நம்முடைய வீட்டில் ஒரு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி, அந்த விளக்கு இறைசக்தியை ஏற்படுத்தி இருப்போம், அந்த இறை சக்தியை ஒரு நொடியில் பூமாதேவிக்கு சமர்ப்பணம் செய்து விட்டால், நம் வீட்டில் இருக்கும் இறை ஆற்றல் ஒவ்வொரு முறையும் குறைவாகத்தான் அர்த்தம் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆக இனி பூஜை பொருட்களை தரையில் வைக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

poojai arai

இதில் குறிப்பாக நம்முடைய வீட்டில் சுவாமி கும்பிடும் போது மணி அடித்து சுவாமி கும்பிடும் பழக்கம் இருக்கும். அந்த மணியை எக்காரணத்தைக் கொண்டும் தரையில் வைக்கக்கூடாது. பூஜை அலமாரியின் மேல் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் இந்த மணி வைப்பதற்காகவே ஒரு சிறிய மரக்கட்டையை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த மர கட்டையின் மேல் மணியை வைத்து வருவது மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

poojai

இதோடு சேர்த்து பெண்கள் பூஜை செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொண்டு பூஜை செய்வது அவ்வளவு சரியான முறை அல்ல. குறிப்பாக கைகளில் இரும்பு மோதிரம், இரும்பினால் செய்யப்பட்ட வளையல்கள் இவைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். இவ்வாறாக உங்கள் வீட்டில் இறைசக்தி நிலைத்திருக்க வேண்டுமென்றால் மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை திருத்திக் கொண்டால் போதும். இறையருள் உங்கள் வீட்டில் முழுமையாக நிறைந்திருக்கும்.