பூஜை அறையில் மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள். இவ்வாறு செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் பணத்திற்கும், அன்னத்திற்கும் பஞ்சம் உண்டாகி கஷ்டங்கள் ஏற்படும்

poojai
- Advertisement -

தினமும் இறைவனை தொழுதுவிட்டு பின்னர் அன்றாட வேலைகளை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். நாம் இருக்கும் வீடு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் மரத்தினாலான பூஜை அறையோ அல்லது சுவரோடு பதிந்து இருக்குமாறு பூஜை அறையோ அமைத்து பூஜை செய்து வருகின்றோம். சில வீடுகளில் அலமாரியை பூஜை அறையாக இருக்கும் பூஜை அறை எப்படி இருந்தாலும் சரி மனதார இறைவனை தொழுதோம் என்றால் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். நம்மை சுற்றியுள்ள சூழலை அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். இவ்வாறான பூஜை அறையில் எவற்றையெல்லாம் வைக்க வேண்டும் எவற்றை எல்லாம் வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

poojai

கடவுளை எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனால் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி தான் பூஜை அறை அமைத்து வழிபட வேண்டும். அப்போதுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அவ்வாறு வீட்டின் ஈசானி மூலையில் தான் பூஜை அறை அமைக்க வேண்டும். கடவுள் படங்கள் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். நாம் ஏற்றும் விளக்கின் தீபமும் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அப்படி ஈசானி மூலையில் பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கு திசையில் பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். பூஜை அறையை புனிதமான இடமாக பாவிக்க வேண்டும். அந்த இடத்தில் தேவையற்ற குப்பைகளையும், வேண்டாத பொருட்களையும் போட்டு வைக்கக் கூடாது.

- Advertisement -

பூஜை அறையில் முதலில் நாம் பார்ப்பது கடவுளின் படங்களாகத்தான் இருக்கும். எனவே மிகவும் ஆக்ரோஷமான தெய்வங்களின் படங்களை பூஜை அறையில் எப்போதும் வைத்திருக்க கூடாது. சாந்தமான தெய்வங்களின் படங்களை மட்டுமே பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.

kaali-maa

அதேபோல் கடவுள் சிலைகளுக்கும், கடவுள் படங்களுக்கும் நாம் அணிவிக்கும் மாலை அல்லது பூக்களை வாடி காய்ந்து விடும் அளவிற்கு விட்டுவிடக்கூடாது. இவ்வாறு செய்வதனால் குடும்பத்தில் கஷ்டங்கள் உண்டாகும். பூக்கள் சற்று பதமாக இருக்கும் பொழுதே அவற்றை அங்கிருந்து எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கும் பாலினை இரண்டு, மூன்று நாட்களுக்கு அங்கேயே வைத்து விடக் கூடாது. அவ்வாறு வைக்கும் பொழுது அவை திரிந்து வீணாகும். இவ்வாறு கடவுளுக்கு படைக்கும் நெய்வேதியம் வீணாகினால் குடும்பத்தில் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படும். எனவே காலையில் வைத்த நெய்வேத்யத்தை மதியம் அல்லது மாலையில் எடுத்து விட வேண்டும்.

kambi-milk2

அதேபோல் விளக்கின் திரியை அனைக்கும் பொழுது வாயால் ஊதி அனைத்து விடக்கூடாது. பூக்களைப் பயன்படுத்தி அனைக்கலாம். அல்லது கல்கண்டை பயன்படுத்தி அனைக்கலாம். கல்கண்டை பயன்படுத்தும் பொழுது சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். பொன், பொருள், நகை, பணம் போன்றவை குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

kamakshi vilakku

அதைப்போல் பூஜையறையில் எப்பொழுதும் பூஜை செய்யும்பொழுது மனதில் தீமையான எண்ணங்களோ, அல்லது பிறரை பற்றிய அவதூறான பேச்சுக்களோ இருக்கக் கூடாது. வீட்டின் பூஜை அறையில் நீங்கள் நுழைந்துவிட்டால் உங்கள் மனது உங்கள் குடும்பத்தின் நன்மைகள் பற்றியும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நலன் பற்றியும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவி நீங்கள் மனதில் நினைத்தவைகளும், உங்கள் வேண்டுதல்களும் நிறைவேறும்.

- Advertisement -