- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநீங்கள் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்கள் சுப சகுணத்தையும், எந்தெந்த விஷயங்கள் அபசகுணத்தையும்...

நீங்கள் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்கள் சுப சகுணத்தையும், எந்தெந்த விஷயங்கள் அபசகுணத்தையும் குறிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

- Advertisement -

நாம் வீட்டில் சாமி கும்பிடும் போது, பூஜை செய்யும் பொழுது சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் நம்மை சுற்றி நடப்பது உண்டு. இவற்றில் சிலவை நமக்கு நல்ல சகுணங்களையும், சிலவை அப சகுணங்களையும் குறிக்கிறது. வீட்டில் மட்டுமல்ல கோவிலில் சென்று சாமி கும்பிட்டாலும் இந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு நல்லது செய்யுமா? கெட்டது செய்யுமா? என்பதை சகுனங்களாக சிலவை அறிவுறுத்தும். அந்த வகையில் சாமி கும்பிடும் பொழுது நல்ல சகுணம் தரக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்கிற சுவாரஸ்ய ஆன்மிகத் தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டை எப்பொழுதும் நறுமணம் கமழும் படியாக நாம் வைத்திருக்க முடியாது. பூஜை செய்யும் பொழுது நமக்கு நல்ல நறுமணமிக்க மணம் வருவதை உணரலாம். நாம் ஊதுபத்தி காட்டாமலேயே சில சமயங்களில் நல்ல நறுமணம் வீசும். இது இறைவனின் அருளை நமக்கு பரிபூரணமாக சுப சகுனமாகக் எடுத்துரைக்கிறது. திடீரென விபூதி வாசனை வருவதை, குங்கும வாசம் வருவது, சந்தன வாசம் வருவது, கற்பூர வாசம் வருவது போன்றவையும் நிகழக்கூடும். நாம் பயன்படுத்தாத பொருட்களின் வாசனை வரும் பொழுது அங்கு தெய்வீக சக்தியை நாம் உணர முடிகிறது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் சாமி கும்பிடும் பொழுது கண்களில் கண்ணீர் வரும். நம்மை அறியாமல் உடல் சிலிர்க்கும், ரோமக்கால்கள் எல்லாம் தூக்கிக் கொண்டு நிற்கும். கை, கால்கள் நடுங்கும். இது போல நமக்கு நேர்ந்தால் நம்மால் இறைவனை உணர முடிகிறது என்பது அர்த்தமாகும். சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது திடீரென மலர்கள் கீழே விழுவது அல்லது துளசி இலைகள் கீழே விழுவது போன்றவை நிகழ்ந்தாலும் நமக்கு இறைவனுடைய அருள் கிடைத்து விட்டது என்று அர்த்தமாகும். நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் பலிக்கும் என்பது இதன் பொருளாகும்.

வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி வருவது, சாமி கும்பிடும் பொழுது காகம் கரைவது, கரைந்து கொண்டே இருப்பது அல்லது பல்லி சத்தம் எழுவது போன்ற சில சமிஞ்சைகள் நமக்கு நல்ல அறிகுறிகளை எடுத்துரைக்கிறது. சாமி கும்பிடும் பொழுது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பண தொகை சிலர் கொண்டு வந்து தாமாகவே கொடுப்பது அல்லது வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வருகை தருவது போன்ற விஷயங்கள் நடந்தாலும் அது சுப சகுனமாகும்.\

- Advertisement -

அவர்களுக்கு குடிக்க தன்னர் கொடுத்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலம் போன்றவற்றை கொடுத்து வழியனுப்புவது நல்லது. இது போல கோவிலில் நின்று சாமி கும்பிடும் பொழுது மலர்கள் விழுவது, மணியோசை கேட்பது, பல்லி சத்தம் எழுவது, காகம் கரைவது போன்றவையும் சுப சகுனமாகக் கருதப்படுகிறது.

சாமி கும்பிடும் பொழுது யாராவது பசி என்று பிச்சை கேட்டு வந்தாலும் அல்லது தானம் கேட்டு வந்தாலும் இல்லை என்று கூறக் கூடாது. சில சமயங்களில் இப்படி கடவுளின் அருளால், இத்தகைய நேரத்தில் இறைவன் இத்தகைய ரூபங்களில் வருவது உண்டு. எனவே உங்களுக்கு வைக்கப்படும் இந்த திருவிளையாடலில் நீங்கள் மற்றவர்களுக்கு உணவளிக்க விரும்பாவிட்டால் வரக் கூடிய நன்மைகள் வராமல் போய்விடும். இது போல சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்களை அப சகுணத்தைக் குறிக்கும்? என்று அடுத்த பதிவில் காண்போம்.

சற்று முன்