ஒரு மனிதனால் இறைவனை வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் அதற்கு காரணம், அவனுடைய கர்மவினையாகத்தான் இருக்கும். இறைவனை கண் குளிர பார்க்க முடியவில்லை, இறைவன் பாடல்களை காது குளிர கேட்க முடியவில்லை, இறைவனை மனதார உணர முடியவில்லை, மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை, என்றால் அதற்கான காரணமும் நீங்கள் செய்த கர்ம வினை மட்டும்தான்.
இதையெல்லாம் தாண்டி உங்கள் விதியை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால், எவ்வளவு தடை வந்தாலும் இறை வழிபாடு செய்யுங்கள். தடைகளை தாண்டி செய்யக்கூடிய இறை வழிபாடு உங்களுடைய வாழ்க்கையில் அளவில்லா இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த வகையில் ஒருவர் பூஜை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்களை பற்றி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை திரிகரன சுத்தி என்று சொல்கிறார்கள்.
ஆண்டாள் இறைவனை வழிபாடு செய்யும் போதும் இந்த விஷயத்தை பின்பற்றியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இறைவனை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் பாடிய பாடலில் சொல்லி வைத்துள்ளார்கள்.
அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் ஒரு நாள் இறைவனை வழிபாடு செய்யவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் பட்டினியாக இருப்பார்களாம். இறைவனை வழிபாடு செய்து, இறைவனின் அருள் ஆசியை பெற்ற பிறகு தான் அவர்களுக்கு வயிற்றுக்கு சாப்பாடு. அது போல ஒரு நிலைமை இருந்தது. ஆனால் இன்று கலிகாலம்.
தினமும் இறைவனுக்கு பூஜை செய்துவிட்டு, இறைவனுக்கு நெய்வேதியம் வைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும் என்றால் இந்த பூமியில் முக்கால் வாசிப்பேர் பட்டினியாகத்தான் இருப்பார்கள். இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப தினமும் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ‘கோவிந்தா கோவிந்தா, நாராயணா நாராயணா, சிவசிவ,’ அல்லது உங்கள் பிடித்த இஷ்ட தெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லிவிட்டு அதன் பிறகு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் நல்லது.
பூஜையில் கடை பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
சரி பூஜை செய்யும்போது திரிகரன சுத்தத்தோடு பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னீர்களே. அது என்ன சுத்தம். மனதை முதலில் சுத்தப்படுத்தி ஒருநிலைப்படுத்தி, புஷ்பங்களை இறைவனுக்கு உங்கள் கைகளால் தூவி, உங்களுடைய வாய் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். (உடல் சுத்தமும் மன சுத்தமும் மிக மிக முக்கியம்) மனது வாய் கை இது மூன்றுமே ஒரு நிலை பட வேண்டும்.
இந்த மூன்று விஷயத்தையும் ஒரே நேரத்தில் செய்து வழிபாட்டை செய்வதுதான் திரிகரன சுத்தி என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக் கூடிய வழிபாட்டின் மூலமாகத்தான் நம்மால் வழிபாட்டில் பூஜையில் முழு பலனையும் பெற முடியும் என்கிறது சாஸ்திரம். போன போக்கில் கோவிலுக்கு உள்ளே கர்ப்ப காலத்தில் இருக்கும் இறைவனை மனதில் நினைத்து, வாசனையிலேயே நின்று இறைவனை நம்பிக்கையோடு கும்பிட்டாலும் பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: சனி பகவானின் தாக்கம் குறைய, மார்கழி சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் முறையாக வீட்டில் பூஜை என்றால் மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடிங்கள். சாஸ்திரங்களை தெரிந்து கற்று வைத்துக் கொள்வது நல்லது. சில சாத்திரங்களை பின்பற்றும்போது மேலும் மேலும் இறைவன் உங்களுக்கு நல்ல விஷயங்களை வாரி வாரி கொடுப்பான் என்ற தகவலுடன், இந்த நல்ல விஷயத்தை இந்த நல்ல நாளில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.