காரசாரமான அசத்தலான இந்த பூண்டு பொடி ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க! 10 பூண்டு பொடி தோசை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று நாக்கு கேட்கும்.

poondu-podi
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களில் இந்த பூண்டுக்கு முதலிடம் உண்டு. தினந்தோறும் சமையலில் பூண்டை சேர்த்துக் கொள்வது நம்முடைய இதயத்திற்கும் நல்லது. இந்த பூண்டை எல்லோரும் சாப்பிடும் வகையில், பூண்டு பொடியாக எப்படி அரைக்கலாம் என்பதை பற்றிய ஒரு காரசாரமான ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க. நாளைக்கு இந்த பூண்டு பொடி பூண்டு பொடி தோசையை, சுட்டு உங்க வீட்ல இருக்கவங்களுக்கு கொடுத்து பாருங்க. சூப்பரான பாராட்டை வாங்கிருவீங்க.

poondu

பூண்டு பொடி அரைக்க தேவையான பொருட்கள். உரித்த பூண்டு – 3/4 கப், உளுந்து – 1 கப், வரமிளகாய் 6 லிருந்து 8, தேங்காய் துருவல் – 1/2 கப், கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

உளுந்தை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, மற்ற பொருட்களையும் அதே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்டு சொல்லப்போனால் 150 கிராம் அளவு உளுந்து எடுத்துக் கொண்டால், பெரிய அளவில் இருக்கும் இரண்டு முழு பூண்டை எடுத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.

poondu

பூண்டை தோல் உரித்து ஒன்றும் இரண்டுமாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து விடுங்கள். 2 லிருந்து 3 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பூண்டு எண்ணெயில் மூழ்கும் அளவிற்கு இருக்க வேண்டும். இந்த பூண்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

கடாயில் இருந்து பூண்டை மட்டும் எண்ணெயில் இருந்து வடித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உளுந்தை சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வரமிளகாயை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ulunthu

அடுத்தபடியாக அதே கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக மொறுமொறுவென்று வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயில் சுத்தமாக ஈரப்பதம் இருக்க கூடாது. இறுதியாக, கடாயில் எண்ணெய் இருக்காது. தேங்காய்த்துருவல் எல்லா எண்ணெயும் எடுத்திருக்கும்.

- Advertisement -

podi

இப்போது ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுவென வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். கருவேப்பிலையில் உப்பையும் பெருங்காயத்தையும் சேர்த்து கடாய் சூட்டில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

karuvepilai

இப்போது இந்த பொருட்களெல்லாம் நன்றாக ஆற வேண்டும். நீங்கள் வறுத்து எடுத்த பூண்டு ஆறிய பின்பு கையில் எடுத்து உடைத்து பார்த்தால் மொறுமொறுவென இருக்க வேண்டும். ஆனால், கருகி இருக்கக்கூடாது. மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் உளுந்தம் பருப்பையும், வர மிளகாயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து விட்டு அதன் பின்பு மீதமுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

dosai

இப்போது நமக்கு பூண்டு பொடி தயார் ஆகிவிட்டது. இது கொஞ்சம் எண்ணெய் பசையோடு தான் இருக்கும். காரணம் நாம் எல்லா பொருட்களையும் எண்ணெய் சேர்த்து வறுத்து இருக்கின்றோம் அல்லவா? இந்த பூண்டு பொடி வெளியே வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். அதற்கு மேலே உங்களுக்கு வேண்டுமென்றால் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

dosai1

தோசைக்கல்லை அடுப்பில் வையுங்கள். மெல்லிசாக தோசையை ஊற்றுங்கள். அதன் மேலே பூண்டு பொடியை தூவி மேலே நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் ஒரு மூடி போட்டு சிவக்க வையுங்கள். சுடச்சுட தோசையை எடுத்து பரிமாறி பாருங்க! வாசத்தோடு பூண்டு பொடி தோசை தயார். உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப பிடிச்சிருக்கா. நாளைக்கு ட்ரை பண்ணுங்க.

- Advertisement -