பூசம் நட்சத்திரக்காரர்கள் இவற்றை செய்தால் அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறலாம்

poosam
- Advertisement -

பூமியில் மனிதர்கள் பயன்படுத்துகின்ற பலவகையான உலோகங்களில் இரும்பு மட்டுமே மிகவும் வலிமை உடையதாக இருக்கிறது. இந்த இரும்பின் மீது நவகிரகங்களில் சனி கிரகத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது போலவே சனி பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இரும்பைப் போன்ற உடல் மற்றும் மன உறுதியை பெற்றவர்களாக இருக்கின்றனர். அத்தகைய சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் வருகின்ற ஒரு நட்சத்திரமாக பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Sani baghavan

27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவதாக வரும் நட்சத்திரம் “பூசம்” நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் நவகிரக அதிபதியாக “சனி” பகவான் இருக்கிறார். ” 8 ” என்பது சனி பகவானுக்குரிய எண் ஆகும் நட்சத்திர வரிசையில் 8 வதாக பூசம் நட்சத்திரம் வருவது சனி பகவானின் முழுமையான ஆதிக்கம் இந்நட்சத்திரக்காரர்கள் மீது இருப்பதை காட்டுகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக “குரு” பகவான் இருக்கிறார். பூசம் நட்சத்திரகாரர்கள் தங்களின் வாழ்வில் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை திட சித்தத்துடன் செய்து வருதல் அவசியம்.

- Advertisement -

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தன்று திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கோவிலில் இருக்கும் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து கருப்பு அல்லது அடர் நீல நிற வஸ்திரம் சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபடுவதால் வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெற முடியும். ஏதேனும் ஒரு மாதத்தில் வருகின்ற வளர்பிறை வியாழக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் குரு கிரக தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சென்று, சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கி அங்கிருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வதால் பூச நட்சத்திரக்காரர்களுக்கு பாதகங்கள் நீங்கி மிகுதியான அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும்.

guru bagwan

மாதந்தோறும் வருகின்ற பூச நட்சத்திர தினத்தில் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் கடைநிலை தொழிலாளர்களுக்கு உங்களின் நட்சத்திர பிறந்தநாள் அன்று அன்னதானம் செய்வதும் புத்தாடைகள் தானம் வழங்குவதும் வாழ்வில் மிகச் சிறப்பான நன்மைகளை உண்டாக்க செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ராகு தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Poosam nakshatra dosha pariharam in Tamil. It is also called Poosam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Sani bhagavan natchathirangal in Tamil or Poosam natchathira pariharangal in Tamil.

- Advertisement -