அம்மாக்கண்ணு பாட்டு – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே”
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.

இதையும் படிக்கலாமே:
சிட்டுக் குருவியைப் போலே – பாரதியார் கவிதை

அம்மாக்கண்ணு பாட்டு என்ற தலைப்பில், பூட்டைத் திறப்பது கையாலே என்ற பாரதியார் கவிதை மிகவும் கருத்து நிறைந்ததாக உள்ளது. குழந்தைகள் நிச்சயம் படிக்க வேண்டிய கவிதை இது. இந்த கவிதைக்கு மெட்டிசைத்து பலர் இதை பாடல் ஆக்கி உள்ளனர். அதில் ஒரு பாடல் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

English Overview:
Here we have Bharathiyar Kavithaigal – Ammakannu Pattu. The first line of this Bharathiyar Padal is “Poottai thurapathu kaiyaale”.