உங்கள் மனதில் ‘பூட்டி’ வைத்திருக்கும் பிரச்சனைகளை கூட, இந்தப் ‘பூட்டு’ பரிகாரம் சுலபமாக தீர்த்து விடும்.

poottu pariharam

நமக்கு இருக்கும் சில பிரச்சனைகளை, அடுத்தவர்களிடம் மனம்விட்டு சொல்லிவிடலாம். சில பிரச்சனைகளை, எவரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். ஆனால் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சனையை இறைவனிடம் மட்டும் தான் கூற முடியும். தீர்க்கமுடியாத, வெளியில் சொல்ல முடியாத, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அந்த இறைவனின் பாதங்களில் சரணடைவது தான் சரியான வழி. இறை வழிபாட்டின் மூலம்தான் நம்முடைய பிரச்சனைக்கு ஒரு விடிவு காலத்தை கொண்டு வரமுடியும். ஆனால் அந்த இறைவழிபாட்டிலும், பலன் விரைவாக கிடைக்க வேண்டுமென்றால், அதற்கும் சில சூட்சம முறைகள் நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. உங்களுடைய தீராத கஷ்டங்களுக்கும், வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளுக்கும், தீர்வு காணக்கூடிய ஒரு சுலபமான பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

poojai arai

தீர்க்கமுடியாத ஏதாவது ஒரு கஷ்டம் உங்களுக்கு இருக்கலாம். நீண்ட நாட்களாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை, ஆரோக்கியத்தில் குறைபாடு, வீட்டில் கஷ்டம், சேமிப்பு இல்லை, திருமணம் ஆகவில்லை. இப்படி உங்களை வருத்தப்படுத்தும் எந்த ஒரு கவலையாக இருந்தாலும், ஏதாவது ஒரு பிரச்சினை மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். பல பிரச்சனைகளை சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று பூட்டு விற்கும் கடைக்கு சென்று ஒரு புதிய இரும்பு பூட்டை வாங்கி வரவும். பூட்டு சரியாக வேலை செய்கிறதா? என்றெல்லாம் கடையில் திறந்து பார்க்க கூடாது. கவர்கூட பிரிக்காமல் அந்த பூட்டை, நீங்கள் வாங்கி உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுங்கள்.  வெள்ளிக்கிழமை இரவு படுத்து தூங்கும் போது, உங்களுடைய தலையணைக்கு அடியில் அந்த பூட்டை வைத்து உறங்கி விடுங்கள். தலையணைக்கு அடியில் வைக்கும் போது கவரை எடுத்துவிடவேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை, உங்களது வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு இந்த பூட்டை தானமாக கொடுத்து விடலாம். நீங்கள் தானமாக கொடுத்த பூட்டை, அந்த கோவிலில் என்றிலிருந்து பயன்படுத்தி, திறந்து மூட தொடங்குகிறார்களோ, அந்த நாள் முதல் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்துவிடும்.

pootu

உங்களுக்கு மற்றவர்களிடம் வெளியில் சொல்லவே முடியாத கஷ்டங்கள் ஏதாவது இருந்தால், ஒரு பூட்டை வாங்கிக் கொள்ளவும். இரும்பு பூட்டாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால், இதுவும் கடைக்காரரின் கை படக்கூடாது. இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். புதிதாக வாங்கப்பட்ட பூட்டை, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து முருகன் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு, மனதார உங்களது கோரிக்கையை சொல்ல வேண்டும். அதன் பின்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த பூட்டை 108முறை பூட்டி, திறக்க வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூட்டை 108 முறை மூடி திறக்கும் போதும் ‘முந்து முந்து முருகவேல் முந்து’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வரவேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 45 நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் பிரச்சினைக்கான தீர்வு 45 நாட்களுக்குள்ளேயே கிடைத்து விட்டாலும், பரிகாரத்தை 45 நாட்கள் தொடர்ந்து செய்து முடித்துவிட வேண்டும்.

pootu

பரிகாரம் முடிந்த பின்பு இந்தப் பூட்டை திறந்த நிலையில், முருகன் படத்திற்கு முன்பாகவே வைத்துக்கொள்ளலாம். பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டும் என்ற சமயம் வரும்போது, இந்த பூட்டை திரும்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரச்சனைகளுக்கா குறைவு. உங்களுக்கு தீராத கஷ்டங்கள் வரும்போதெல்லாம் முருகப்பெருமானிடம் உங்களது பிரார்த்தனையை இந்த முறையில் கூறி பாருங்கள். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக நல்ல பலன் உண்டு.