நாம் நன்றாக வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதை பார்த்து, வயிற்றெரிச்சல்படுபவர்களுடைய கண் பார்வையிலிருந்து, கண் திருஷ்டியில் இருந்து எப்படி தப்பிப்பது?

poramai
- Advertisement -

தன்னுடைய குடும்பம் சந்தோஷமாக வாழ்கிறதா இல்லையா என்பதை சிலபேர் பார்ப்பதே கிடையாது. அடுத்தவங்க குடும்பத்தில் என்ன நடக்குது. பக்கத்து வீட்டுக்காரங்க எப்படி வழறாங்க, சொந்தக்காரர்கள் நண்பர்கள் எப்படி வாழறாங்க, என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்கள் நன்றாக வாழ்ந்தால் சில பேருக்கு அது பிடிக்கவே பிடிக்காது. ‘இவனுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்க்கையா இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு’ என்று அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை படுபவர்களின் எண்ணிக்கைதான் இந்த காலத்தில் அதிகமாக உள்ளது. இதற்காக ஒட்டுமொத்தமாக எல்லாரையும் பார்த்து பொறாமை படுபவர்கள், என்று சொல்லிவிட முடியாது. அடுத்தவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படும் சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது.

vellai-poosanikkai

சரி, நம்முடைய வீட்டில் ஒரு விசேஷம் வைத்திருக்கின்றோம். அது திருமணமாக இருக்கலாம் அல்லது புதுமனை புகுவிழா வாக இருக்கலாம் அல்லது வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் கொண்டாட்டம், இப்படி எந்த விழாவாக இருந்தாலும் சரி அந்த விழாவிற்கு வருகை தருபவர்கள் எல்லோருமே நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

- Advertisement -

உங்களுடைய வீட்டு விசேஷத்திற்கு வருபவர்கள் எல்லாருமே உங்களுடைய சொந்தக்காரர்கள் நண்பர்களாக இருந்தாலும், உங்களுடைய இந்த ஆடம்பரமான விசேஷத்தை பார்த்து நிச்சயமாக ஒரு சிலராவது கண் திருஷ்டி வைப்பார்கள். வயிற்று எரிச்சல் படுவார்கள். அந்த கண் திருஷ்டியில் இருந்து அவர்களுடைய வயிற்றிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? இதைப்பற்றித்தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

poosani

முதலில் இந்தப் இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் பூசணிக்காய். இதை கல்யாண பூசணிக்காய் என்றும் சொல்லுவார்கள். உங்க வீட்டு விசேஷங்களில் இந்த கல்யாண பூசணிக்காயை வைத்து சாம்பார் வைத்து, வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த சாம்பாரில் இருக்கும் பூசணிக்காயை சாப்பிட்டு முடித்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் கெட்ட எண்ணங்கள் ஆக இருந்தாலும் சரி, அவர்கள் உங்களுக்கு சாபம் கொடுத்தாலும் சரி, அவர்கள் வயிறு எரிந்து உங்கள் மீது கண் திருஷ்டி போட்டாலும் சரி, அந்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நேர்மறை ஆற்றலாக மாறி விடும்.

- Advertisement -

பூசணிக்காவிற்கு ஆன்மீக ரீதியாக ஒரு மகத்துவம் உண்டு. அதாவது பூசணிக்காயை சாப்பிடுபவர்கள் உடைய மனதை குளிரச் செய்யக்கூடிய சக்தி இந்த பூசணிக்காய்க்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பூசணிக்காய்க்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர் வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா.

eating-food

அந்த காலத்திலெல்லாம் கல்யாண வீடுகளில் விருந்து என்றால், அந்த விருந்தில் கட்டாயமாக இந்த பூசணிக்காயில் தான் சாம்பார் வைப்பார்களாம். காரணம் கல்யாணத்திற்கு வருபவர்களுடைய கண்திருஷ்டி ஆக இருக்கட்டும் ‘அட இவர்களுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்வா? இத்தனை ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்களே’ என்று நினைக்கும் பொறாமை குணம் ஆக இருக்கட்டும், அந்த கெட்ட எண்ணம் கல்யாணம் நடத்துபவர்களுடைய வீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பையும் தரக்கூடாது என்பதற்காகத்தான் பூசணிக்காய் சாம்பார் வைக்கப்பட்டது.

thirusti poosani

ஆனால் காலப்போக்கில் அது மாறிவிட்டது. பூசணிக்காய் என்றாலே அது திருஷ்டிக்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய பொருள் என்று மாற்றி விட்டோம். திருஷ்டிக்கு பயன்படும் இந்த பூசணிக்காய், அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலை தணிப்பதற்கும் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.

eating

இனி உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷமாக இருந்தாலும் சரி அல்லது உங்களுடைய வீட்டில் ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்தாலும் சரி அதில் பூசணிக்காயை வைத்து ஒரு பலகாரம் செய்து விடுங்கள். பூசணிக்காயை சாம்பார் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூசணிக்காய் அல்வா செய்து கொடுத்தாலும் சரி தான். ஆகமொத்தத்தில் வீட்டிற்கு வருபவர்கள் பூசணிக்காயை சாப்பிட்டு விட்டால் அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஷயம் அவ்வளவுதாங்க. எதிரிகளை சமாளிக்க சூட்சமமான சுலபமான வழிகளில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -