உருளைக்கிழங்கு அழகு குறிப்பு

potato beauty tips
- Advertisement -

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் தங்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொண்டார்கள். இதற்காக யாரும் எந்தவித அழகு நிலையத்திற்கு மருத்துவமனைக்கு சென்றதே கிடையாது. ஆனால் இன்றைய காலத்தில் நாம் அவை அனைத்தையும் மறந்து தான் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கும் அழகு நிலையத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கை வைத்து எப்படி நம்முடைய முகத்தை என்றும் இளமையுடனும் பொலிவுடன் வைத்துக்கொள்ள முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சமையலறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனை தான். இதை மருத்துவமனையாகவும் எடுத்துக் கொள்ளலாம், அழகு நிலையமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படி நம்முடைய அழகையும் மேம்படுத்துவதற்கு சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்கள் பெரிதும் உதவுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் உருளைக்கிழங்கு.

- Advertisement -

உருளைக்கிழங்கை வைத்து பல விதங்களில் நம்முடைய முகத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை மற்றும் இன்று நாம் பார்ப்போம். உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் ஒரே ஒரு ஐஸ்க்யூபை மட்டும் எடுத்து நம்முடைய முகத்தில் நாம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கும். முக துவாரங்கள் இறுகி இளமையான தோற்றத்தை தரும். முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

இதே போல் உருளைக்கிழங்கை நைசாக அரைத்து அதிலிருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்த்து அதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கு சாறையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கி உடனடி பொலிவைத் தரும்.

கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கக்கூடியவர்கள் இந்த உருளைக்கிழங்கு சாரில் சிறிது பஞ்சை நன்றாக நனைத்து கண்ணுக்கு கீழே அப்படியே போட்டு வைத்து விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவலாம் கழுவாமலும் விடலாம். இப்படி செய்வதன் மூலம் கண்ணுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளையங்கள் அனைத்தும் நீங்கும். ஒரு சிலருக்கு வாயை சுற்றியும் இன்னும் சிலருக்கு மூக்குப்பகுதியிலும் இந்த கருமை இருக்கும். அந்த இடத்திலும் இதே முறையை நாம் பயன்படுத்தி அந்த கருமையை நீக்கலாம்.

இதையும் படிக்கலாமே: உடனடி பொலிவை தரும் ஃபேஸ் பேக்

மிகவும் எளிமையான இந்த குறிப்புகளை நாமும் பயன்படுத்தி பியூட்டி பார்லர்ஸ் செல்லாமலேயே நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமையும் கருந்துட்டுகளையும் நீக்க முடியும்.

- Advertisement -