‘உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை’ இது போல ஒருமுறை செஞ்சு பாருங்க சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு அவ்வளவு டேஸ்டாக இருக்குமே!

potato-pepper-fry1
- Advertisement -

உருளைக்கிழங்குகளை மசாலா போட்டு செய்வதையும், டீப் ஃப்ரை செய்வதையும் விட இது போல பெப்பர் போட்டு ஒரு முறை செஞ்சு பாருங்க, அவ்வளவு டேஸ்டாக இருக்கும். பேபி பொட்டேட்டோ கொண்டு செய்யும் பொழுது இன்னும் சுவையாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், கலவை சாதம் போன்றவற்றுக்கு சரியான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த ‘பொட்டேட்டோ பெப்பர் ப்ரை’ எப்படி எளிதாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
பேபி பொட்டேட்டோ – கால் கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கறி மசாலா தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ அளவிற்கு பேபி பொட்டேட்டோ எடுத்து அதில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு குக்கரில் விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஆற வைத்து தோல் உரித்து முழுதாக அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். பேபி பொட்டேட்டோ கிடைக்காதவர்கள் பெரிய உருளைக்கிழங்குகளிலும் செய்யலாம். பெரிய உருளைக் கிழங்குகளை முழுதாக அல்லாமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். பின் தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்ததில் வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடிப்பிடிக்காமல் லேசாக சிம்மில் வைத்து வதக்கிய பின்பு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் லேசாக வறுபட்டதும் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்து பிரட்டி விடுங்கள். எண்ணெய் எல்லாம் உரிந்து கொள்ள நன்கு வதக்கிய பின்பு தேங்காய் துருவலை பூ போல தூவி ஒரு பிரட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்த கருவேப்பிலைகளை நொறுக்கி சேர்த்து பரிமாறி பாருங்கள், அவ்வளவு சுவையாக இருக்கும். இதை பேபி பொட்டேட்டோ மட்டுமல்லாமல், பெரிய உருளைக் கிழங்குகளிலும் தாராளமாக செய்து அசத்தலாம். இதே மாதிரி நீங்களும் உங்களுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கை வைத்து செஞ்சு பாருங்க, பிறகு அடிக்கடி செய்ய தோணும்.

- Advertisement -