லஞ்ச் பாக்ஸ்க்கு உருளை கிழங்கு சாதத்தை இந்த மாசலா சேர்த்து செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மீதம் இருக்காது அது மட்டும் இல்லாம தினமும் இதை தான் செஞ்சு தர சொல்லி கேட்பாங்க.

potato rice masala
- Advertisement -

லஞ்ச் பாக்ஸுக்கு என்ன தயார் செய்வது என்பது ஒவ்வொரு வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய கவலை என்றே சொல்லலாம். இது குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் லஞ்ச் மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இது போல தினமும் லஞ்ச் ரெடி பண்ணும் போது என்ன செய்வது என்று தெரிய கவலை இருக்கும். அப்படி செய்யும் சாதம் அவர்களுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். அதை மீதம் இல்லாமல் சாப்பிடவும் வேண்டும். இவை எல்லாம் யோசித்து தான் அந்த லஞ்ச் பாக்ஸ் தயார் செய்ய வேண்டும். அப்படி ஒரு டேஸ்டான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை 

இந்த சாதம் செய்ய முதலில் இரண்டு உருளைக்கிழங்கை தோல் சீவி ஒரே மாதிரியாக அரிந்து ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் இந்த உருளைக்கிழங்கை போட்டு வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும் உப்பு தண்ணீரில் இருக்கும் போது உருளைக்கிழங்கிலும் உப்பு ஏறி சாப்பிடும் போது நல்ல ருசியாக இருக்கும்.

- Advertisement -

அதே போல் ஒரு டம்ளர் அரிசியை வடித்து சாதத்தை தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள். அதே போல் இரண்டு மீடியம் சைஸ் தக்காளி சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சாதத்தை தாளித்து விடலாம்.

அடுப்பில் கடாய் வைத்து ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு இந்த எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இதை பொரித்த பிறகு செய்யும் பொழுது உருளைக்கிழங்கு கிரிஞ்சியாக சாப்பிட நன்றாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து கடாயில் இருக்கும் எண்ணையில் கொஞ்சம் எடுத்து விடுங்கள். இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் இருந்தால் மட்டும் போதும். அதில் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு கொஞ்சம் முந்திரி பருப்பு சேர்த்து சிவந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து விடுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்து விடுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு நிறம் மாறி வரும் போது ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து குழைய வதக்கி விடுங்கள்.

அதன் பிறகு இதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் உப்பு , கால் டீஸ்பூன் கரம் மசாலா, கடைகளில் கிடைக்கும் ஐந்து ரூபாய் மேகி மசாலா பாக்கெட் இரண்டு வாங்கி அதை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். உருளைக்கிழங்கில் இந்த மசாலா முழுவதும் ஊறிய பிறகு ஏற்கனவே வடித்து வைத்து சாதத்தை இதில் கொட்டி ஒரு முறை நன்றாக கலந்த பிறகு ஒரு கொத்து கொத்தமல்லியை பொடியாக அரிந்து சேர்த்து இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அரிசி உளுந்து எதுவும் சேர்க்காம கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் அதிக ஹெல்தியான இந்த தோசையை செஞ்சு கொடுங்க. காலையில இத மட்டும் சாப்பிட்டா போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

நல்ல கமகமவென்று வாசத்துடன் உருளைக்கிழங்கு சாதம் தயாராகி விட்டது. இதில் இந்த மேகி மசாலாவை சேர்த்து செய்திருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த சாதம் செய்யும் போது இதற்கு குழம்பு சைடிஷ் எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -