இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான இந்த குருமா செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதும். தேங்காய் கூட தேவையில்லை.

sambar
- Advertisement -

தேங்காய் கூட சேர்க்காமல் குருமாவை எப்படி வைப்பது. பொட்டுக்கடலையை வைத்துதான். உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை இருக்கிறதா. நாளைக்கு காலையில சுலபமாக 10 நிமிடத்தில் இந்த குருமாவை வைத்து பாருங்கள். இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு, இந்தக் குருமாவை சூப்பர் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். இந்த குருமா ரெசிபியை உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையாக உள்ளதா. பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

pottukadalai-kuruma

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொட்டுக்கடலை 3 டேபிள்ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன், இந்த 3 பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நைஸாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, மூன்று டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

குருமாவை தாளிக்க அடுப்பில் ஒரு கடாயை வைத்து விடுங்கள். எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 2, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, இந்த பொருட்களையெல்லாம் சேர்த்து முதலில் வதக்கி கொள்ளவேண்டும்.

kuruma

அடுத்த படியாக இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக வதங்கியவுடன் குருமாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி, கரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்தால் போதும். அதிகப்படியாக கொதிக்க வைக்க வேண்டாம்.

இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி, இதை இட்லியின் மேல் சுடச்சுட பரிமாறி பாருங்கள். இந்த குருமாவை எதில் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. முக்கியமான குறிப்பு இதில் நாம் தேங்காயே சேர்க்கவில்லை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளை காலை உங்களுடைய வீட்டில் பொட்டுக் கடலை குருமா தானே.

- Advertisement -