- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபௌர்ணமி மகாலட்சுமி பூஜை

பௌர்ணமி மகாலட்சுமி பூஜை

- Advertisement -

பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்தின் வரக்கூடிய பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகளும் இருக்கும். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பங்குனி மாத பௌர்ணமி நாள் அன்று மகாலட்சுமி தாயாரை வீட்டிலேயே வழிபாடு செய்யும் எளிமையான முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பௌர்ணமி மகாலட்சுமி பூஜை

சந்திர பகவானும் மகாலட்சுமி தாயாரும் உடன் பிறந்தவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளில் நம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் பங்குனி பௌர்ணமி நாள் அன்று செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த மகாலட்சுமி பூஜையை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி காலையிலிருந்து மாலை வரை ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் தாராளமாக நாம் செய்யலாம். இதற்கு நம்முடைய வீட்டில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை போட்டு நன்றாக பரப்பிக் கொள்ளுங்கள். மூன்று சுத்தமான அகல் விளக்கை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்குகளை தாம்பாளத்தில் இருக்கக்கூடிய பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய், ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய், ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் என்று ஊற்றி அதில் பஞ்சுத் திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு வாசனை மிகுந்த மலர்களைப் பயன்படுத்தி மகாலட்சுமி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தூபம் காட்டும் பொழுது கண்டிப்பான முறையில் நிலை வாசலுக்கு வெளியே சென்று நிலை வாசலுக்கு நன்றாக தூபம் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த மந்திரத்தை கூறி நாம் அர்ச்சனை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் மனமகிழ்ந்து நம் வீட்டிற்கு வந்து சகல செல்வத்தையும் அருள்வார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே எழுந்தருக”

இதையும் படிக்கலாமே: தலையெழுத்து மாற முருகன் மந்திரம்

முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஒரு எளிமையான பூஜையை செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் சகல செல்வத்தையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்