பிரச்சனைகளால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறீர்களா? இதை செய்து பாருங்கள்.

ஒரு சிலரின் வாழ்க்கையில் தீராத துன்பங்களால் அவதிபட்டுக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்த பலனும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளில் சிக்கி தவித்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனோ நிலை விரக்தியின் உச்ச நிலையில் இருக்கும். நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது? எல்லாரும் நிம்மதியாக தானே இருக்கிறார்கள் என்று தோன்றும். அது அப்படி இல்லை. எல்லா மனிதனும் ஏதோ ஒரு பிரச்சனையில் இருந்து கொண்டு இருப்பார்கள். அவர்களின் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். பிரச்சனைகளை கண்டு அஞ்சி கொண்டு இருந்தால் தீர்ந்து விடுவதில்லை. தேவையில்லாமல் கடன் வாங்குவது நீங்களாக இருந்து கொண்டு பின்னால் கடவுளை வஞ்சித்து என்ன பயன்? நம்முடைய சக்திக்கு மீறிய எதுவும் பின்னாளில் பிரச்சனையாக வந்து நம் முன் நிற்கும். அது போல் தான் உங்களின் பிரச்சனைகளுக்கு நீங்கள் தான் காரணகர்த்தாவாக இருப்பீர்கள். இறைவனால் அந்த பிரச்சனை உண்டாகவில்லை. ஆனால் அந்த இறைவனால் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும். சில பரிகாரங்களை செய்து மன நிம்மதியை தேடிக்கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தொடர் தோல்விகள் மற்றும் பிரச்சனைகளை விரட்டி அடித்து மனதில் நிம்மதியுடன் இருக்க இந்த எளிய பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்:
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அருகம்புல்லை மாலையாக கட்டிக் கொள்ள வேண்டும். அதே போல் வெற்றிலையையும் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். வீட்டின் நுழைவு வாயிலில் இருபுறமும் இந்த இரு மாலைகளை தொங்க விட வேண்டும். இதை பௌர்ணமி அன்று மட்டும் தான் செய்ய வேண்டும். ஏனெனில் முழு நிலவு நாளில் பிரபஞ்சத்தின் முழு சக்தியையும் பெற முடியும் என்கிறது சாஸ்திரம். பின்னர் வாயிலின் இரு புறமும் அகல் விளக்கில் இழுப்பை எண்ணையையை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக்கி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வளவு நேரம் தான் எரிய வேண்டும் என்று ஒன்றும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எரிய விடலாம் தவறில்லை. பின்னர் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் இரண்டையும் நுணுக்கி இரு புறமும் தூவி விட வேண்டும். அவ்வளவு தான். உங்களின் இஷ்ட தெய்வத்தையும், சந்திர பகவானையும் மனதில் நினைத்து உங்களின் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து விட முழு நம்பிக்கையுடன் வேண்டி கொள்ள வேண்டும். வீட்டில் எப்போதும் விளக்கேற்றி தூப தீபம் காட்டுவதனால் எந்த தீவினையும் நம்மை நெருங்காது. ஆனால் அதை யாரும் இன்றைய அவசர யுகத்தில் செய்வதே கிடையாது. இல்லத்தில் நல்ல வாசம் இருக்க வேண்டும். அது மனதையும் ஒருநிலைபடுத்தும். உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்பதில் ஐய்யமில்லை.

vetrilai-arugampul-malai

மறு நாள் காலையில் அந்த மாலைகளை கழற்றி நல்ல தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்து ஓடும் தண்ணீரில் அல்லது செடி கொடிகளுக்கு இடையே போட்டு விடலாம். ஊறிய அந்த தண்ணீரை கொண்டு வீடு முழுவதும் சுத்தம் செய்யலாம், குளிக்கலாம். இதனால் உடலும், இல்லமும் நேர்மறை சக்திகள் ஊடுருவி இறையருள் பெற்று சகல தோஷங்களில் இருந்தும் விடுப்பெற்று பல நன்மைகளை பெறலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இவ்வளவு பௌர்ணமி என்றில்லாமல் முடிந்த வரை தொடர்ந்து செய்து வருவதால் வீட்டில் பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் தடை, மன இறுக்கம் போன்ற சகல பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவீர்கள். எந்த பரிகாரத்தையும் இறை நம்பிக்கையுடன் செய்யுங்கள். இப்படி செய்தால் நடக்குமா என்று சந்தேகத்துடன் செய்தால் அதில் பலன் இல்லை. நம்மால் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இறைவன் இருக்கிறார் என்று அவர் மேல் பாரத்தை போட்டு விட்டு செய்து கொண்டே இருங்கள். நல்ல எண்ணங்கள் உங்களுக்குள் வருவதை நீங்களே உணர்வீர்கள். நல்ல எண்ணங்கள் வந்து விட்டால் நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
பொங்கல் பண்டிகையில் மஞ்சள் கொத்தும், கரும்பும் அவசியமாக வைப்பதற்கு காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pournami pariharam Tamil. Pournami valipadu palangal Tamil. Pournami valipadu Tamil. Pournami parihara pooja Tamil.