- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபௌர்ணமி சிவபெருமான் மந்திரம்

பௌர்ணமி சிவபெருமான் மந்திரம்

- Advertisement -

பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு, அம்பாள் வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவுக்கு சிவன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்ற நாட்களில் வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்தால் ஒரு மடங்கு பலம் தான் கிடைக்கும்.

இன்று சிவலிங்கத்திற்கு உங்க கையால் ஒரு வில்வ இலையைக் கொண்டு அர்ச்சனை செய்தால் ஒரு லட்சம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்த பலனை பெற முடியும். நீங்கள் வைத்த வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும். இன்று மாலை சிவபெருமான் வழிபாடை எப்படி செய்வது, எந்த மந்திரத்தை உச்சரித்தால் சிவனின் அருள் ஆசி கிடைக்கும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பௌர்ணமி சிவன் வழிபாடு

வீட்டில் சிவலிங்கம் இல்லை, சிவபெருமானின் திருவுருவப்படம் இல்லை, என்பவர்கள் கோவிலுக்கு வில்வ இலைகளை வாங்கிக் கொடுக்கலாம். சிவன் கோவிலில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். வீட்டிலேயே சிவன் ஸ்வரூபகமாக ஏதாவது திருவுருவப்படம் சிலை இருக்கிறது என்றால், அதற்கு அபிஷேகம் செய்துவிட்டு உங்கள் கையால் அந்த சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

வழக்கம் போல தான் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து ஏதாவது ஒரு பிரசாதம் நெய்வேதியம் வைத்து, வழிபாட்டை செய்ய வேண்டும். முக்கியமாக இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் செய்வது சிறப்பான பலனை தரும். பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை நினைத்து வில்வ இலையில் அர்ச்சனை செய்து கொண்டு சொல்ல வேண்டிய சிவ மந்திரம். இதோ உங்களுக்காக.

- Advertisement -

சிவ மந்திரம்

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

- Advertisement -

மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா

ஒவ்வொரு வரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஒரு இலையை எடுத்து சிவபெருமான் பாதத்தில் போட்டு அர்ச்சனை செய்வது சிறப்பு. இன்று சிவபெருமானுக்கு அப்பம் நெய்வேதியமாக செய்து வைத்து வழிபாடு செய்தால் கோடான கோடி நன்மைகள் நடக்கும். இனிப்பு அப்பம் சுடுவோம் அல்லவா, அதுபோல உங்களுக்கு தெரிந்தது போல அப்பம் செய்து சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: குபேர பௌர்ணமி பரிகாரம்

முடிந்தால் அந்த அப்பத்தை நாலு பேருக்கு தானமாக கொடுங்கள். நம்பிக்கை இருப்பவர்கள் இன்று சிவபெருமானின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நம்ப முடியாத அதிசயங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்