பவுர்ணமியில் இந்த பூஜை செய்வதால் இவ்வளவு நன்மைகளா? பௌர்ணமியில் செய்ய வேண்டிய விஷயங்களும்! அதனால் கிடைக்கும் பலன்களும்!

- Advertisement -

பௌர்ணமியில் இப்பிரபஞ்சத்தில் நல்ல சக்திகள் அதீத ஆதிக்கம் பெற்றிருக்கும் என்பது நியதி. அந்நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விரைவாக பலிதமாகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. பவுர்ணமியில் கிரிவலம் வருவது, பௌர்ணமியில் பரிகாரங்களை மேற்கொள்வது, சந்திர தரிசனம் செய்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது நம் மனதில் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் தூண்டி விடக்கூடும் என்பது உண்மை. சந்திரபகவான் நம் மனதிற்கு அதிபதியாக இருக்கின்றார். எனவே பவுர்ணமி நாளில் செய்யக்கூடிய இந்த சில விஷயங்கள் அதீத பலன்களைக் கொடுக்க வல்லது. அது என்னவென்று? தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

முழு நிலவு இருக்கும் நன்னாள் ஆன பௌர்ணமியில் நிறைய வகைகள் உண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட பௌர்ணமிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதில் ஒவ்வொரு பவுர்ணமி வழிபாடு ஒவ்வொரு பலன்களை கொடுக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர். வளர்பிறை, தேய்பிறை, பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகலில் நிலவு இருப்பது என்று விதவிதமான பௌர்ணமி நேரங்கள் ஒவ்வொரு பலன்களை கொடுக்கும். ஒரு மாதத்தில் வரும் 2 பௌர்ணமிகளிலும் நாம் கட்டாயம் இறைவழிபாடு மேற்கொண்டால் நமக்கு நல்ல விஷயங்கள் நடைபெறும்.

- Advertisement -

பௌர்ணமியில் கோவிலுக்கு செல்வது, மலை மேல் ஏறுவது, வலம் வருவது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது நம் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதனால் மனதளவிலும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கூட இறைவழிபாடு மேற்கொள்ளலாம். எந்த கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை, பவுர்ணமி நன்னாளில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

hari-chandran

மேலும் பௌர்ணமி நாளில் விரதமிருந்து சந்திர வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். சந்திர பகவான் சன்னிதிக்குச் சென்று வெண்ணிற வஸ்திரம் சாற்றி, வெண்ணிற மலர்கள் அணிவித்து, பக்தர்களுக்கு பாயாசம், வெண்பொங்கல் போன்ற வெள்ளை நிற நைவேத்தியங்கள் படைத்து தானம் கொடுப்பது மனோதிடத்தை அதிகரிக்க செய்யும். ஒருவருடைய உள்ளுணர்வைத் தூண்டி நேர்மறையாக சிந்திக்க செய்து எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வலிமை பெற செய்யும்.

- Advertisement -

மேலும் இந்நாளில் பழம்பெருமை வாய்ந்த ஸ்தல விருட்சங்களை வலம் வந்து பிரதட்சணம் செய்து வழிபடுவது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். ஆலமரம், அரசமரம், வேம்பு, வில்வம், புன்னை, வன்னி ஆகிய விருட்சங்களை வலம் வந்து வழிபட்டால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமியில் வீட்டு வாசலில் நெய்விளக்கு ஏற்றி, மாவிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்வதும், சந்திர தரிசனம் செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

chandran-

அன்றைய நாளில் வீட்டிற்குள் சாப்பிடாமல் மொட்டைமாடி அல்லது நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் இருந்து மீண்டு வருவதற்கு பௌர்ணமியில் நிலவொளியில் அமர்ந்து சாப்பிடுவது நல்ல தீர்வாக அமையும். அதிலிருந்து வரும் மூன்றாம் பிறை தரிசனத்தை செய்தால் இன்னும் அதீத பலன்களை பெறலாம். எந்த ஒரு பரிகாரத்தையும் பவுர்ணமி நாட்களில் ஆரம்பிப்பது சுபீட்சம் நிறைந்ததாக தடைகளின்றி நிறைவேறுவதற்கு உதவும். பௌர்ணமிக்கு இத்தகைய வலிமை வாய்ந்த சக்திகள் இருக்கும் பொழுது அதை தவற விட்டு விடாதீர்கள்.

- Advertisement -