வரும் ஆவனி 8/9/2022 பிரதோஷத்தன்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுமாம் தெரியுமா?

sivan-nandhi-pradosham
- Advertisement -

ஒவ்வொரு பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு விசேஷமான பூஜைகள் செய்வது வழக்கம். பிரதோஷ நாளன்று பிரதோஷ வலம் வருவது அதிலும் சிறப்பு! அவருக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதும், அபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மோட்சத்தை கொடுக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரதோஷத்தன்று சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை அல்லது பாடலை நீங்கள் தவறாமல் உச்சரித்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷத்தன்று சொல்ல வேண்டிய அற்புதமான தமிழ் பாடல் இதோ உங்களுக்காக:

- Advertisement -

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்
மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

- Advertisement -

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்

- Advertisement -

நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
திருவே நமச்சிவாயம் தெளிவே நமச்சிவாயம்

கருவே நமச்சிவாயம் கனிவே நமச்சிவாயம்
அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
பெண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்னம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே

சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
ஒலியே நமச்சிவாயம் உணர்வே நமச்சிவாயம்
வெளியே நமச்சிவாயம் விசையே நமச்சிவாயம்

மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஞானம் வழங்கி நர்கதி அளீக்கும்
நந்தி வாகனா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
நாகம் நமச்சிவாயம் ரகசியம் நமச்சிவாயம்
யோகம் நமச்சிவாயம் யாகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்

ராக நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அதிர்வும் நமச்சிவாயம் அசைவும் நமச்சிவாயம்
நிலையும் நமச்சிவாயம் நிறைவும் நமச்சிவாயம்

ரமண முனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்

ஈசமகேஷா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
கோடை நமச்சிவாயம் கொண்டலும் நமச்சிவாயம்
வாடையும் நமச்சிவாயம் தென்றலும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பரணி தீபமாய தரணியில் ஒளிரும்
பரமேஷ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
ஹரஹர என்றால் வரமழை பொழியும்

ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
சித்தியும் நமச்சிவாயம் முக்தியும் நமச்சிவாயம்
பக்தியும் நமச்சிவாயம் சக்தியும் நமச்சிவாயம்

கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்
தீபச்சுடரே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்

அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
நிலவே நமச்சிவாயம் நிஜமே நமச்சிவாயம்
கலையே நமச்சிவாயம் நினைவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்
சோனாலச்சனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா
பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்
புரியும் பரமே போற்றி

ஹர ஓம் நமச்சிவாயா
லிங்கம் நமச்சிவாயம் லீலை நமச்சிவாயம்
கங்கை நமச்சிவாயம் கருணை நமச்சிவாயம்

சோனை நதி தீரம் கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய
வானவெளிதனை கோபுரம் ஆக்கி

மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
செல்வம் நமச்சிவாயம் சீரும் நமச்சிவாயம்
வில்வம் நமச்சிவாயம் வேஷம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

வேதியர் போற்றும் வென்சடை இறைவா
வேதப்பொருளே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

முதலும் நமச்சிவாயம் முடிவும் நமச்சிவாயம்
இடையும் நமச்சிவாயம் விடையும் நமச்சிவாயம்
நாகமுடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேத நடுவிலே திருநீர் அணியும்
அருனேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா
அம்மையும் நமச்சிவாயம் அப்பனும் நமச்சிவாயம்
நண்மையும் நமச்சிவாயம் நாதனும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவ

- Advertisement -