செல்வம் பெருகுவதற்கு முறையாக பூஜை செய்வது எப்படி?

mahalakshmi
- Advertisement -

பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய நாளைத்தான் நாம் வரலட்சுமி விரதநாளாக கொண்டாடுகிரோம் என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லட்சுமிகளை அன்று மனதார வேண்டி பூஜித்து விரதமிருந்தால், எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். வாருங்கள் வரலட்சுமி விரத பூஜையை எப்படி முறையாக செய்வது என்று பார்ப்போம்.

mahalakshmi

வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலை வேலையில் உங்கள் வசதிக்கு ஏற்றால் போல் செய்யலாம். முதலில் விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு அதன் பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் வைக்க வேண்டும்.

kalasam

அதன் பிறகு நிவேதனப் பொருட்களான பொங்கல், வடை, பாயாசம், அப்பம், லட்டு, கொழுக்கட்டை, பசும்பால், நெய், தயிர், கற்கண்டு, தேன் ஆகியவற்றை கலசம் முன் வைக்க வேண்டும். இதில் விளாம்பழம், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழ வகைகளையும் வைக்கலாம்.

- Advertisement -

அதன் பிறகு வீட்டு வாசலிற்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு பணிவாக அழைக்க வேண்டும்.

அதன் பின் மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக கருதி, பூஜையில் வைக்கப்பட்டுள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியும்படி அன்னையிடம் வேண்டிக்கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் இப்போது வீற்றிருக்கும் மகாலட்சுமியின் மனம் குளிரும்படி அவளுக்குரிய ஸ்லோகங்கள் பாடல்கள் என பலவற்றை பாடி அவளை மகிழ்விக்க வேண்டும். அதன் பிறகு நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

அதன் பிறகு மகாலட்சுமி எப்போதும் உங்கள் வீட்டில் இருக்க வேண்டுமென மனதார வேண்டிக்கிக்கொண்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

- Advertisement -