ஒருமுறை இப்படி முட்டை ஆம்லெட் செய்து பாருங்கள், ஆஹா! எவ்வளவு ருசி என்று அனைவரும் பாராட்ட ஆரம்பித்து விடுவார்கள்

omelet
- Advertisement -

வீட்டில் காய்கறி இல்லை என்றாலும் ஒரு குழம்பு வைத்து, அதனுடன் ஒரு முட்டை ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை அவியல் செய்து வைத்தால் மட்டும் போதும். வீட்டில் உள்ளவர்கள் கேள்வி கேட்டால் சாப்பிட்டு விடுவார்கள். அவ்வாறு தினமும் முட்டை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வாறு முட்டை பிரியர்கள் என பலருக்கு, இந்த முட்டைகளை பல விதமான முறையில் சமைத்து கொடுக்கின்றோம். முட்டையை எந்த காய்கறியுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். அதேபோல் முட்டையை உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்யலாம். இவ்வாறு பல உணவுகளில் சேர்க்கப்படும் இந்த முட்டையுடன் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒருமுறை இப்படி ஆம்லெட் செய்து கொடுங்கள். புதினா, கொத்தமல்லி வாசனையுடன் இந்த முட்டையின் சுவை சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இந்த ஆம்லெட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 4, புதினா – கால் கப், கொத்தமல்லி தழை – கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, மிளகு தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்னர் புதினா தழை மற்றும் கொத்தமல்லித்தழையை தண்ணீரில் சுத்தமாக அலசி வைக்க வேண்டும். பின்னர் நான்கு முட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெயீ நன்றாக சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பை அனைத்துவிட்டு, தண்ணீரில் அலசி வைத்துள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து லேசாக கிளறி விட்டு, வதக்கிய அனைத்து பொருட்களையும் கலந்து வைத்துள்ள முட்டையில் சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தும் ஒன்று சேர நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் இருந்து ஒரு கரண்டி அளவு ஊற்றி, ஆம்லெட் செய்ய வேண்டும். இவை நன்றாக வெந்ததும் ஆம்லெட்டை திருப்பிப் போட்டு, 2 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். இப்படி மீதம் இருக்கும் அனைத்து முட்டை கலவையிலும் ஆம்லெட் செய்ய வேண்டும்.

- Advertisement -