புதினா சாதத்தை மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் இப்படியும் செய்யலாம். காலையில் இப்படி செய்த புதினா சாதத்தை, மதியம் லஞ்ச் பாக்ஸில் கொண்டு போய் சாப்பிடுங்க. ஆஹா சொல்ல வார்த்தையே இருக்காது.

pudhina-sadam
- Advertisement -

உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய புதினாக்கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் புதினாவை வைத்து இப்படி புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. வெள்ளை சாதம் வடித்து வைத்து விட்டால் போதும். சட்டென்று பத்து நிமிஷத்தில புதினா சாதம் மிக சுவையாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

pudhina-sadam1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 3 கைப்பிடி அளவு புதினா தழைகள், பச்சை மிளகாய் – 2, சிறிய துண்டு – இஞ்சி, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வடித்து ஆற வைத்த சாதம் 1 கப் அளவு நமக்கு தேவைப்படும். அதாவது இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு தேவையான சாதத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சாதம் குழைவாக இருக்கக்கூடாது. உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

pudhina-sadam2

இப்போது சாதத்தை தாளித்து கிளறவேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அதில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் இரண்டாக கிள்ளியது – 3, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2 ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, இவைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து விட வேண்டும்.

- Advertisement -

எல்லா பொருட்களும் வறுபட்ட உடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை கடாயில் தாளிப்புடன் சேர்த்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு தூவி, இந்த புதினா விழுதை சுருள சுருள வதக்க வேண்டும். ஏனென்றால் எல்லா பொருட்களையும் பச்சையாக சேர்த்துதான் மிக்ஸியில் அரைத்து இருக்கின்றோம்.

pudhina-sadam3

நாம் சேர்த்த விழுதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி இது ஒரு தொக்கு பதத்திற்கு வந்த உடன், உதிரி உதிரியாக வடித்து இருக்கும் சாதத்தை கடாயில் கொட்டி பக்குவமாகப் கிளறி விடவேண்டும். சாதம் சூடானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். 2 நிமிடம் மூடி போட்டு, அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த சாதத்தை எடுத்து பரிமாறுங்கள். மிக மிக சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதத்தை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்து, காலையில் செய்த சாதத்தை மதியம் சாப்பிட்டால் இன்னும் அருமை. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -