- Advertisement -
Homeவிளையாட்டுகிரிக்கெட்cricket seithigal : அடுத்த பிறவியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டராவதே எனது ஆசை - புஜாரா

cricket seithigal : அடுத்த பிறவியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டராவதே எனது ஆசை – புஜாரா

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரர் என்றால் தற்போது உள்ள அணியில் நிரந்தர இடம் பிடித்திருப்பவர் சதீஸ்வர் புஜாரா. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படுகிறார். அந்த அளவிற்கு விடாப்பிடியான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். இவருக்கு அடுத்து இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படுபவர் புஜாரா.

pant-1

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா 193 ரன்கள் அடித்தார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறார். இந்த தொடரில் இவர் மட்டும் மூன்று சதங்களை விளாசியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்ட்ரேலிய வீரர்களே இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத நிலையில் இந்திய அணி வீரரான புஜாரா மூன்று சதம் அடித்து மொத்தம் 592 ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

pujara

இந்நிலையில் புஜாரா அளித்த பேட்டியில் : நான் எனது அடுத்த பிறவியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டராகவே பிறக்க ஆசைப்படுகிறேன். கிரிக்கெட் என் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. நான் கிரிக்கெட்டை நேசித்து அனுபவித்து ஆடுகிறேன். அதனால், என்னால் சிறப்பாக தொடர்ந்து விளையாட முடிகிறது அனைத்து நாடுகளிலும் சதமடிக்க விரும்புகிறேன் என்றார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Cricket news today Tamil : இந்த வயதிலும் இவ்வளவு உயர பாய்ச்சலா ? பிரமிக்கவைக்கும் டைவ் அடித்த மெக்கல்லம் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

சற்று முன்