புழுங்கல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

pulungal-arisi

இந்தியாவில் சரிபாதி மக்களின் அன்றாட உணவு அரிசி தானியம் கொண்டே செய்யப்படுகிறது. அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் எந்த ஒரு வகை அரிசியையும் சிறிது நேரம் நீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்து செயற்கையாக தயாரிக்கபடும் அரிசி வகை தான் புழுங்கல் அரிசி. இந்த புழுங்கல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பலவகையான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pulungal-arisi

புழுங்கல் அரிசி நன்மைகள்

தயாமின் சத்து
புழுங்கல் அரிசியில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. அதிலும் வைட்டமின் சட்டத்தின் ஒரு வகையான தயாமின் சத்து இதில் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள், இதயத் தசைகள் வலுவிழப்பது, மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எந்த வகையான அரிசி உணவுகளையும் சற்று குறைவான அளவில் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் புழுங்கல் அரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் திறன் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே எந்த வகை நீரிழிவு நோயாளிகளும் புழுங்கல் அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால் உடல்நலம் மேம்படும்.

pulungal-arisi

- Advertisement -

குழந்தைகள் நலம்

சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படிப்பட்ட காலங்களில் குழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியை உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புழுங்கல் அரிசியில் இருக்கின்ற சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ஜுரம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை விரைவில் போக்குகிறது.

ரத்த ஓட்டம்

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். புழுங்கல் அரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

pulungal-arisi

மலச்சிக்கல்

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் புழுங்கல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

pulungal-arisi

புரதம்

புழுங்கல் அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

குடல் புற்று

இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று நோய். புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

pulungal-arisi

ரத்த கொதிப்பு

முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. புழுங்கல் அரிசி ரத்தத்தில் பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

தாய்ப்பால்

குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். புழுங்கல் அரிசியின் சத்துகள் நிறைந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:
மணலி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pulungal arisi benefits in Tamil. It is also called as Pulungal arisi payanpadugal in Tamil or Pulungal arisi payangal in Tamil or Pulungal arisi uses in Tamil.