- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி மாத அஷ்டமி வழிபாடு

புரட்டாசி மாத அஷ்டமி வழிபாடு

- Advertisement -

அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வருவது கால பைரவர் தான். தேய்பிறை அஷ்டமி ஆக இருந்தாலும் வளர்பிறை அஷ்டமியாக இருந்தாலும் கால பைரவரை நாம் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. சனிபகவானுக்கு குருவாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். காலத்திற்கு தலைவராகவும் அவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபடும் பொழுது காலத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும், சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவரை புரட்டாசி மாதத்தில்
வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி அன்று எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி மாத அஷ்டமி வழிபாடு

சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக் கூடியவர் தான் கால பைரவர். அஷ்டலஷ்மிகள் அனைவரும் அஷ்டமி திதியில் அதாவது வளர்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடும் வழக்கம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால் தான் வளர்பிறை அஷ்டமி சமயத்தில் காலபைரவரை நாம் வழிபடும் பொழுது அஷ்ட லட்சுமிகளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும், அதனால் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி இருக்கும் பட்சத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று வழிபடுவதன் மூலம் நம்முடைய தைரியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். யார் எதிரிகள் யார் துரோகிகள் யார் நண்பர்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு மனப்பக்குவம் ஏற்படும். தீய சக்திகள் அனைத்தும் விலகும். சரி இப்பொழுது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி பற்றி பார்ப்போம்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி ஆனது அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நிறைவு அடைகிறது. கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தாலும் வீட்டிலேயே கால பைரவரை நினைத்து வழிபடுபவர்களாக இருந்தாலும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது என்பது சிறப்பு.

- Advertisement -

கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு கால பைரவரை மூன்று முறை வலம் வந்து “ஓம் கால பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை 54 முறையோ 108 முறையோ மனதார அவர் முன்பாக அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

இதுவே வீட்டில் காலபைரவரை வழிபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த நேரத்தில் வீட்டிலேயே கால பைரவரை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக மிளகு வடை மற்றும் தயிர் சாதத்தை வைக்க வேண்டும். பிறகு அமைதியாக அமர்ந்து மேல் சொன்ன அதே மந்திரமான “ஓம் கால பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை 54 அல்லது 108 முறை கூறவேண்டும்.

- Advertisement -

இப்படி கூறி வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அஷ்டமி திதி அன்று நம்மால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு நாம் அன்னதானம் செய்கிறோமோ அந்த அளவிற்கு காலபைரவரின் அருள் நமக்கு கிடைக்கும். மேலும் இந்த அன்னதானமானது சனிக்கிழமை அன்று செய்வதன் மூலம் குருவான காலபைரவரின் அருளும், சிஷ்யனான சனி பகவானின் அருளும் ஒருசேர கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்களும் பிரச்சனைகளும் படிப்படியாக விலகும்.

இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் துர்காஷ்டமி வழிபாடு

எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்வதாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் அவர்களை நம்பி மனதார செய்தால் கண்டிப்பான முறையில் பலன் கிடைக்கும். கால பைரவரையும் இதே போல் வணங்கி அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்