இது ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம். அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த பரிகாரம். இடைப்பட்ட காலத்தில் இந்த பரிகாரம் அனைவராலும் மறக்கப்பட்டது. ஆனால் ருணம் ரோகம் சத்ரு தொல்லை நீங்க இந்த பரிகாரத்தை அந்த காலம் தொட்டே செய்து வந்தார்கள்.
கடன் நோய் கோர்ட் கேஸ் வழக்குகள், எதிரி தொல்லைகள் விலக இந்த பரிகாரத்தை புரட்டாசி மாதம் வரக்கூடிய சனிக்கிழமைகளில் செய்யலாம். அப்படி இல்லை என்றால் புரட்டாசி மாதம் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தன்று செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். இது கொஞ்சம் சிரமமான பரிகாரம்தான். சிரமப்பட்டு செய்து விட்டீர்கள் என்றால் வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்தீர்கள் அவ்வளவுதான்.
ருணம் ரோகம் நீங்க பெருமாள் வழிபாடு
அந்த பெருமாளை நினைத்து உங்கள் வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம் . உங்கள் வீட்டு பூஜை அறைக்குள் இருக்கும் பெருமாள் படத்திற்கு முன்பே இந்த பரிகாரத்தை செய்யலாம். மாவிளக்கு பரிகாரம். யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ, அந்த நபரை படுக்க வைத்து, அவர்களுடைய வயிற்றில் மாவிளக்கு போட வேண்டும்.
வயிற்றில் தொப்புள் பகுதிக்கு மேல் இந்த மாவிளக்கை ஏற்றுவார்கள். தெற்கு பக்கம் தலை பகுதி, வடக்கு பக்கம் கால் இருக்கட்டும். அந்த நபருடைய வயிற்றுப் பகுதியில் ஒரு தலை வாழை இலை போட்டு அதற்கு மேலே இரண்டு மாவிளக்குகளை பிடித்து வைத்து, இரண்டு மாவிளக்கிலும் அஞ்சு முகம் திரி போடவேண்டும். மொத்தமாக பத்து பஞ்சு திரிகள். ஒவ்வொரு விளக்கில் 5 திரி வீதம் போட்டுக்கோங்க.
அந்த மாவிளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி இந்த தீபத்தை எறிய விட வேண்டும். கீழே படுத்து இருக்கும் அந்த குறிப்பிட்ட நபர் மனதிற்குள்ளேயே கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த தீபம் நெய் தீரும் வரை அப்படியே தான் எரிய வேண்டும்.
அதுவரை அந்த நபர் தரையில் படுத்து கொண்டே கோவிந்தா நாமத்தை நம்பிக்கையோடு உச்சரித்துக் கொண்டால் போதும். நெய் தீபம் எரிந்து முடிந்ததும் இந்த தீபத்தை வாழை இலையோடு எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு பெருமாளுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
வழிபாட்டை முடித்து விட்டு இந்த மாவிளக்கை பசு மாட்டிற்கு கொடுத்து விடலாம். எவர் ஒருவர் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தங்களுடைய வயிற்றுக்கு மேல் இந்த மாவிளக்கு தீபத்தை ஏற்றி வைத்து வேண்டுதல் வைக்கிறீர்களோ அவர்கள் வாழ்க்கையில் கடன் தொந்தரவு இருக்காது. கோர்ட்டு கேஸ் வழக்குகளால் பிரச்சனை வராது. எதிரி தொல்லை வராது.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
செய்த பாவத்தால், கர்ம வினைகளால், வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து வந்திருந்தால், அந்த பாவத்திலிருந்து விடுபடவும் இந்த மாவிளக்கு தீப வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். அந்த காலத்தில் எல்லாம் இந்த தீப வழிபாட்டை மிகவும் பிரசித்தியாக செய்வார்கள். இன்று காலப்போக்கில் இது மறைக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதை மட்டும் செய்து பாருங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கை மாறும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.