புரட்டாசி சனி கிழமை மற்றும் சனி பிரதோஷம் பலன்கள்

Perumal Sivan
- Advertisement -

புரட்டாசி மாதம் புனிதம் நிறைந்த மாதமாகும். பெருமாளின் வழிபாட்டிற்குரிய மாதம். சனிக்கிழமை என்றாலே பெருமாளின் வழிபாட்டிற்குரிய நாளாகவே எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. அது போல் சைவ மத கடவுளான சிவபெருமானுக்கு உகந்த வழிபட்டு நேரம் பிரதோஷம் நேரமாகும். மற்ற எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமை தினத்தில் வரும் சனிப்பிரதோஷம் தான் மிகவும் விசேஷமானதாகும். அப்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை, சனிப்பிரதோஷம் ஆகிய இரண்டும் ஒரே தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

Tirupathi Perumal

சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய வழிபாடும், சிவனுக்குரிய சனிப்பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுவதிலிருந்தே நவகிரகங்களில் சனிபகவானுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. திருப்பதி திருமலையில் நின்றவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் “ஏழுமலையான்” சனீஸ்வரனின் அம்சம் நிறைந்தவர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்காக விரதம் இருப்பது மிகவும் முக்கியம் என்றாலும் இன்றைய தினத்தில் சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இன்றைய தினம் ஆன்மீக ரீதியாக மிகவும் வலுப்பெறுகிறது.

- Advertisement -

இன்று காலை முதல் பெருமாளுக்கு விரதம் இருப்பதோடு மட்டும் அல்லாமல் இன்றைய பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் போன்றவற்றால் செய்த மாலையை சாற்றி, நெய்தீபங்கள் ஏற்றி பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து நிவேதனமாக வைத்து வழிபடுவது சிறந்தது.

சனி பிரதோஷமும், புரட்டாசி சனி விரதமும் சேர்ந்து வரும் இந்த நன்னாளில் எவர் ஒருவர் முறையாக இரண்டு வழிபாடுகளையும் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளும் சிவனின் அருளும் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் சனி பகவானால் ஏற்படும் தாக்கங்கள் குறையும். அதோடு அவர்கள் வாழ்வில் அருப்புதமான முன்னேற்றங்களும் நலலவைகளும் தொடர்ந்து நடக்கும்.

- Advertisement -

Sivan

இன்று உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம். பகல் முழுதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் படித்து பெருமாளை வணங்கி மாலையில் சிவனின் பிரதோஷ தரிசனம் செய்த பிறகு, உப்பு காரம் புளி அதிகம் சேர்க்காத உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details of Purattasi Sani prathosam, Purattasi Sani viratham in Tamil and Purattasi sani valipadu in Tamil.

- Advertisement -