புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என்றும் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பு என்றும் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அதை கடைபிடித்துதான் வருகிறார்கள். அதையும் தாண்டி ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கிறது. அந்த வகையில் புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் செல்ல வேண்டிய கோவிலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
விநாயகப் பெருமான் காரிய தடையை நீக்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் எளிமையான தெய்வமாகவும் கருதப்படுகிறார். அப்படி விநாயகப் பெருமானுக்குரிய சிறப்புகளை கொண்டவராக திகழ்ந்தவர் தான் ஆஞ்சநேயர். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஆஞ்சநேயருக்கு வாசனை நிறைந்த மலர்களை வாங்கிக் கொண்டு தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஆஞ்சநேயருக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக லட்டு என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடிக்கும்.
அதிலும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை வாங்கிச் சென்று ஆஞ்சநேயருக்கு படைத்துவிட்டு நெய் தீபம் ஏற்றி வைத்து அவரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த லட்டுவை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும். இந்த முறையில் வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு தீபம் ஏற்றுவதற்கு தேவைப்படுகின்ற எண்ணெயை வாங்கி தானமாக கூட தரலாம்.
இந்த முறையில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாத பட்சத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயும் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்யலாம். ஆஞ்சநேயரின் படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான கிண்ணத்தில் வெண்ணையை வைத்து தெய்வங்களுக்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
இப்பொழுது ஆஞ்சநேயரை மனதார நினைத்து உங்களுடைய கஷ்டங்களும் தோஷங்களும், துன்பங்களும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் வேண்டும்பொழுது ஆஞ்சநேயரின் அருளால் நம்முடைய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த வெண்ணையை வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பிரசாதமாக தரலாம் அல்லது சமைப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்புடன் வாழ சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஆலயத்திற்கு சென்று இந்த கடவுளை வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களையும் விலகச் செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.