அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்க உங்களோட பர்ஸ்ல இத மட்டும் வச்சு பாருங்க, சொன்னா நம்பமாட்டீங்க! பணம் சுரந்து கொண்டே இருக்கும்.

pursewithcash

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மணிபர்ஸில் எப்போதுமே பணம் காசு நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த மணிபர்ஸில் நாம் எந்த பொருளை வைத்தால், அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டு வரும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய பர்ஸ்ஸிலிருந்து செலவழிக்கக் கூடிய பணம் திரும்பவும் நமக்கு இரட்டிப்பாக, நம் கைக்கு வரவேண்டும். அதாவது கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க சுரந்துகொண்டே இருக்கும் அல்லவா? அதுபோல்தான் பர்ஸிலிருந்து காசை செலவு செய்ய செய்ய, பணம் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த தண்ணீர் இறைக்க கிணறும் இல்லை. பர்ஸில் காசும் இல்லை. இது மட்டும்தான் உண்மை.

purse

சரி, தீபாவளி வரக்கூடிய இந்த நல்ல நாளில், பணத்தை சேர்ப்பதில் இப்படி ஒரு தந்திரம் முறையை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்த அந்த இறைவனுக்கு நன்றி கூறி, எல்லோருக்கும் நிறைவான செல்வ வளம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பதிவினை தொடங்கலாமா?

குபேரருக்கு உகந்த பச்சை நிற குங்குமத்தை வைத்துதான் இந்த பரிகாரமே சொல்லப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலிருந்தும் நன்மையை நமக்கு ஈர்த்து தரக்கூடிய சக்தி ஸ்வஸ்திக் சின்னத்தை உண்டு. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை எப்போதும் நம் பர்ஸில் வைத்துக் கொண்டால் நமக்கு அதிர்ஷ்டக் காற்று வீசிக்கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக, இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து உங்களுடைய பர்ஸில் வைத்து பாருங்கள். நிச்சயம் யோகம் அடிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையோடு செய்தால் மட்டும்.

green-tea

முடிந்தால் உங்கள் பர்சில் வைக்கும் அளவிற்கு மகாலட்சுமி போட்டோவை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் புகைப்படத்தின் பின் பக்கத்தில், பச்சை நிற குங்குமத்தை தண்ணீரில் குழைத்து ஒரு தீப்பெட்டி குச்சியால், அந்த குங்குமத்தை தொட்டு, மகாலட்சுமி படத்திற்கு பின் பக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். அது நன்றாக காய்ந்த பின்பு அதை உங்களது மணி பர்ஸ்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது முதல் டிப்ஸ்.

- Advertisement -

இரண்டாவதாக பெண்கள் தங்களுடைய ஹேண்ட்பேக், பர்ஸ் இவற்றில் கண்ணாடி வைக்கும் பழக்கம் இருக்கும். கண்ணாடி வைத்த மணி பர்ஸை வைத்துக் கொள்வது நமக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியும். அந்த கண்ணாடியில் இதேபோல பச்சை நிற குங்குமத்தை தண்ணீரில் கரைத்து, அந்த குங்குமத்தை தொட்டு ஸ்வஸ்திக் சின்னம் வைத்து, உலர வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நீங்கள் அந்தப் பர்ஸை எப்போதும்போல பயன்படுத்தலாம்.

swastik symbol benefits tamil

மாதத்திற்கு ஒரு முறை வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அந்த ஸ்வஸ்திக் சின்னம் அழியும்போது மட்டும் மீண்டும், போட்டுக்கொண்டால் போதும். இவ்வாறாக பர்ஸில் பச்சைநிற இருந்தால் யோகம் வரும். நிறைய பேர் ட்ரை பண்ணி, அவங்களுக்கு இது சக்சஸும் ஆயிருக்கு.

swasthik

இது எதுவுமே முடியவில்லை என்றால், ஒரு வெள்ளைக் காகிதத்தில் நான்கு பக்கத்திலும் மஞ்சள் வைத்து விட்டு, நடுவே பச்சை நிற பேனா கொண்டு, ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, வைத்துக்கொண்டாலும் அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

swastik palan

ஸ்வஸ்திக் சின்னத்தை உங்களுடைய பர்ஸ்ஸில் வைத்து விட்டு, பர்ஸை காலியாக மட்டும் வைத்து விடாதீர்கள். எப்போதும் பத்து ரூபாயாவது அந்த பர்ஸ்ஸில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பர்ஸும் பச்சை நிறமாக இருந்தால், அது இன்னும் விசேஷமானது.

purse

பணத்தை ஈர்த்து தருவதில் பச்சை நிறத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வரும் போது, பெரிய அளவிலான பலனை நம்மால் அடைய முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். ஒருரொரு டிப்ஸா ஃபாலோ பண்ணிட்டே இருங்க! உங்களுக்கு எது பிடிக்குதோ அதை க்ளிக் பண்ணிக்கோங்க.