புது வீடு விரைவில் கட்டி முடிக்க பரிகாரம்

new-home

மனிதர்கள் நாம் அதிகம் வெளியே அலைந்து திரிந்தாலும், நமக்கென்று வசிப்பதற்கு வீடு ஒன்று இருப்பது அவசியமாகும். அனைவருக்குமே சொந்த வீடு கட்டி அதில் குடியிருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களுக்கென்று சொந்த வீடு கட்ட, தங்களின் சேமிப்பில் உள்ள பணத்தையும், கடன்கள் வாங்கியும் கட்டுகின்றனர். அந்த வீடுகளை கால தாமதமின்றி கட்டிமுடிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு பரிகார முறை தான் இது.

புது வீடு கட்ட துவங்குபவர்கள் முதலில் உங்களின் குலதெய்வத்திற்கு படையலிட்டு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பின்பு பூமிகாரகனாகிய செவ்வாய் பகவானின் அம்சம் நிறைந்தவரான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். பின்பு அக்கோவில் இருக்கும் கடற்கரைக்கு சென்று குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீரை ஒரு புட்டியில் நிரப்பி எடுத்துக்கொண்டு வரவேண்டும். அந்த நீரை உங்கள் வீடு பூஜையறையில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

புது வீடு கட்ட நீங்கள் அஸ்திவாரம் தோண்டி, பூஜை செய்து செங்கற்களை கொண்டு கட்டுமானம் ஆரம்பிக்கும் முன்பு உங்களின் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமானை வணங்கி 6 செங்கற்களை கிழக்கு – மேற்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும். அப்போது நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கடல் தண்ணீரை ஒரு பாத்திரத்தில்எடுத்து கொண்டு அதில் மஞ்சள் போட்டு நன்கு கரைத்து, கிழக்கு மேற்காக வைக்கப்பட்டிருக்கும் செங்கற்கள் மீது தெளிக்க வேண்டும். பின்பு தேங்காய், பழம், பூ ஆகியவற்றை அதன் மீது வைத்து உங்கள் குலதெய்வத்தையும், முருகப்பெருமானையும் மீண்டும் வணங்க வேண்டும்.

பின்பு மூன்று சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, பூ ஆகியவற்றை கொடுத்து, பின்பு அவர்கள் கைகளால் பூஜை செய்யப்பட்ட செங்கற்களை கட்டுமான பணிகளுக்கு எடுத்து தர செய்ய வேண்டும். அந்த செங்கற்களை கொண்டு முதல் கட்டுமான வேலையை தொடங்க வேண்டும். இந்த முறையை பின்பற்றுவதால் புது வீட்டை தாமதங்கள் இன்றி கட்டி முடித்து விடலாம். மீதமுள்ள கடல் நீரில் மஞ்சள் கலந்து வீடு, கட்டிடங்கள் கட்டுமிடங்களில் தெளித்து விடுவதால் திருஷ்டிகள், தீய சக்திகள் போன்றவற்றால் புது வீடு, கட்டிடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

இதையும் படிக்கலாமே:
நவராத்திரி பூஜை எப்படி செய்தால் அதிக பலன் கிடைக்கும்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Puthu veedu katta pariharam in Tamil