இன்றைக்கு மதியம், உங்கள் வீட்டில் சாதம் மிச்சம் ஆகிவிட்டதா? டக்குனு, இன்னைக்கு நைட்டே இந்த தோசையை சுட்டு பாருங்க! சூப்பரா, சுவையா இருக்கும்.

dosa-cook
- Advertisement -

நிறையபேர் வீட்ல மதியம் சாதம் மிச்சம் ஆகிவிட்டால், அந்த சாதத்தை வீணாக்கி விடுவார்கள். ஆனால், அந்த சாதத்தை வைத்து சுவையான, மொறுமொறு தோசை சுடலாம். அந்த தோசையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

dosai

தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்கடலை தோல் உரித்தது – 1/4 கப்
மீதமான சாதம் – 1 கப்
அரிசி மாவு – 3/4 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
புளித்த தயிர் – 1/4 கப்

- Advertisement -

மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை முதலில் போட்டு, அரைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு, மீதமான சாதத்தை போட வேண்டும். தண்ணீர் ஊற்றி வைத்த மீதமான சாதமாக இருந்தாலும், தண்ணீரை நன்றாகப் பிழிந்து விட்டு போட்டுக் கொள்ளலாம். அடுத்ததாக அரிசி மாவு, கோதுமை மாவு, தயிர், தேவையான அளவு உப்பு, சேர்த்து இந்த கலவையை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

dosai-maavu

அரைத்த மாவில் இறுதியாக இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு ரவை சேர்த்து தோசைக்கல்லில் தோசை ஊற்றினால் மொரு மொரு தோசை தயார். தோசை சூப்பராக வரும். அப்படி தோசை சரியாக வராத பட்சத்தில், கொஞ்சம் பச்சரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தோசைக்கு, பச்சைமிளகாய் தேங்காய் சட்னி, அல்லது வரமிளகாய், பூண்டு, தேங்காய் சேர்த்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமான சாதத்தை வைத்து பத்தே நிமிடத்தில், இரவு சுவையான டிஃபன் ரெடி.

இதையும் படிக்கலாமே
ரேஷன் அரிசியை, ஒருமுறை இந்த முறையில் சுத்தம் செய்து, சாதம் வடித்து தான் பாருங்களேன்! கடையில் காசு கொடுத்து அரிசி வாங்கவே மாட்டிங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have moru moru dosa. palaya sadam dosa. palaya sadam recipe in tamil

- Advertisement -