உங்கள் பணப்பெட்டியில் வைத்திருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் 2 வேர்! அந்த ரகசிய வேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

mooligai-ver

எல்லோருக்கும் அவரவர் செய்யும் தொழிலாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், சிறப்பாக நடைபெற்று லாபம் அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். சிலருக்கு தொழிலில் போட்டிகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். சில பேர், என்னதான் முயற்சி எடுத்தாலும் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள். சிலர் வேலைக்கு சென்று பணத்தை திறமையாக சம்பாதித்து விடுவார்கள். ஆனால் அதை சேமிக்க முடியாமல் தவித்து வருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம் முன்னோர்களால் ஒரு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது.

மூலிகைச் செடிகளின் மூலம் பரிகாரங்களை செய்வதால் ஒருவர் வாழ்க்கையில் கட்டாயம் விரைவாக முன்னேற்றத்தை அடையமுடியும். மூலிகைச் செடிகளுக்கு மருத்துவ குணம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மந்திர குணமும் அதிகம். இதற்காக எந்த ஒரு மாய மந்திர வித்தையையும் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முன்னோர்கள் நமக்காக சொல்லிவிட்டு சென்ற சுலபமான முறைகள் உள்ளது. ஆனால் அதை முறைப்படி செய்ய வேண்டியது மிக அவசியம்.

இரண்டு செடிகளின் வேர்களை வைத்து, இரண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. உங்களது வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரக்கூடிய, அந்த இரண்டு பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்காக பயன்படுத்தப் போகும் அந்த இரண்டு செடிகளில், ஒன்று தொட்டா சிணுங்கி செடி, இரண்டாவதாக குப்பைமேனி செடி. இந்த இரண்டு செடிகளும் நாம் எல்லோரும் அறிந்த செடிவகை தான். எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கக்கூடிய செடி வகை தான். இதன்மூலம் பரிகாரத்தை எப்படி செய்யப் போகின்றோம் என்று பார்க்கலாம்.

thotta-sinungi

வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தொட்டா சிணுங்கி செடிக்கு சிறிதளவு மஞ்சள், குங்குமம் வைத்து தூபம் காட்டி விடுங்கள். அதன் பின்பு மண்ணை தோண்டி தான் அந்த செடியை, அடியிலிருக்கும் வேரோடு எடுக்க வேண்டும். பிடுங்கி எடுக்கக்கூடாது. இப்படி பூமியில் புதைந்திருக்கும் வேரை வெளியில் எடுத்த பின்பு, அந்த வேரிலிருந்து சிறிதளவு கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளில் தான் வேரை கிள்ளி எடுக்க வேண்டுமே தவிர, கத்திரிகோலை  பயன்படுத்தி வெட்டி எடுக்கக்கூடாது.

- Advertisement -

மீண்டும் அந்த செடியை அந்த இடத்திலேயே புதைத்து வைத்து விடுங்கள். நமக்குத் தேவை அந்த தொட்டாசிணுங்கியின் வேர் மட்டும்தான். அந்த சிறிதளவு வேரை எடுத்து வீட்டிற்கு வந்து, மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து, உங்கள் வீட்டு பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த டப்பாவில் மூடி விடக்கூடாது திறந்தபடி தான் வைக்கவேண்டும். முடிந்தவரை சின்ன செப்பு தட்டு, அல்லது பித்தளை தட்டு இருந்தால் அதில் வைத்துக்கூட பணப்பெட்டியில் வைக்கலாம். இவ்வளவு தான் பரிகாரம்.

thotta-sinungi1

இந்த வேரை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் தொழிலில் பிரச்சனையாக இருந்தால், தொழில் செய்யும் இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பணவரவு அதிகமாக வர வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். எதிரிகளின் தொல்லையை இதன்மூலம் உங்களுக்கு வராது என்பது நிதர்சனமான உண்மை.

அடுத்ததாக வெள்ளிக்கிழமை அன்று, குப்பைமேனி செடியை வேரோடு பிடுங்கி கொண்டுவந்து, உங்கள் வீட்டில் ஒரு பித்தளை சொம்பில் முழுமையாக சுத்தமான நீரை நிரப்பி, அந்த குப்பைமேனி செடியை, அந்த நீருக்குள் போட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். வேர்பகுதி தண்ணீரில் மூழ்கி இருக்கும்படி போடவேண்டும். குப்பைமேனி செடிக்கு, லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாகவே இருக்கின்றது. அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த குப்பைமேனி செடி தண்ணீருக்குள் அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கலாம். மறுவாரம் தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய குப்பைமேனி செடியை எடுத்து வையுங்கள். தொடர்ந்து 11 வாரம் செய்து வந்தாலே நல்ல மாற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறக்க போகிறீர்கள்? கருடபுராணம் சொல்லும் உண்மையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam peruga in Tamil. Panam athigam vara Tamil. Panam athikarikka Tamil. Panam sera pariharam Tamil.