10 நிமிடத்தில் கேழ்வரகு பன் தோசை சுலபமாக இப்படி செஞ்சு பாருங்க 2k கிட்ஸ் கூட அடிக்கடி கேட்டு சாப்பிடுவாங்க

ragi-bun-dosai1_tamil
- Advertisement -

கேழ்வரகு தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அந்த காலங்களில் கேழ்வரகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கேழ்வரகு இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் கேழ்வரகு அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த கேழ்வரகு மாவை வைத்து சுவையான சூப்பரான டேஸ்ட்டில் பன் தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க, வாங்க அதை எப்படி பண்ணலாம்? என்று பார்த்துருவோம்.

கேழ்வரகு பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், ரவை – ஒரு கப், தயிர் – அரை கப், தண்ணீர் – 1 கப். தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 1, துருவிய சிறு கேரட் அல்லது பீட்ரூட் – 1, கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கேழ்வரகு பன் தோசை செய்முறை விளக்கம்:
கேழ்வரகு பன் தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இதே கப் அளவிற்கு அரை கப் தயிர் சேர்த்து, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதற்குள் நாம் ஒரு தாளிப்பை தயார் செய்து விடுவோம். வெறும் ராகி தோசை செய்து சாப்பிடும் பொழுது சுவை நன்றாக இருக்காது, ஆனால் இது போல தாளித்து எந்த ஒரு தோசை செய்தாலும், அதன் ருசி அபாரமாக இருக்கும்.

இந்த வகையில் இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். கொஞ்சம் போல எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வந்ததும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். இதை இரண்டும் இரண்டு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு, ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி இலைகளை நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விருப்பப்பட்டால் கருவேப்பிலை இலைகளையும் இது போல நறுக்கி சேர்க்கலாம். இதனுடன் துருவிய கேரட் அல்லது துருவிய பீட்ரூட் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். இது ஆப்ஷனல் தான் வேண்டாம் என்றால் விட்டு விடலாம். பின்னர் ஒரு முறை நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். ஆறியதும் இந்த பொருட்களை மாவுடன் சேர்த்து தேவையான அளவிற்கு தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தேவையான அளவிற்கு உப்பை இப்பொழுது சேர்த்து கலந்து விடுங்கள்.

இந்த மாவை நீங்கள் இன்ஸ்டன்ட் ஆக தோசை சுட வேண்டும் என்றால் கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஆப்ப சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மாவு நன்கு புளிக்கும், அப்படி இல்லை என்றால் நான்கு முதல் ஐந்து மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள், நன்கு புளித்து விடும். அதன் பிறகு நீங்கள் தோசை வார்க்கலாம். ஒரு கடாய் அல்லது பேன் ஒன்றை வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ரெண்டு கரண்டி மாவை அள்ளி எடுத்து ஊற்றி லேசாக பரப்பி விடுங்கள். பின்னர் மூடி போட்டு மூடி விடுங்கள். இந்த தோசை பன் போல உப்பி வரும். அதன் பிறகு திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சுவைத்து பாருங்கள், அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- Advertisement -