ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய ராகி லட்டு உருண்டை எப்படி சுலபமாக செய்வது? பழங்கால முறையில் ராகி சிமிலி ரெசிபி செய்முறை இதோ!

ragi-smili-urundai1
- Advertisement -

சிறுதானிய வகைகளில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்த ராகியில் செய்யும் இனிப்பான சுவை நிறைந்த ஸ்வீட் லட்டு ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட! குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இந்த லட்டுவை பெரியவர்களும் சாப்பிடலாம். சுகர் இல்லாத யார் வேண்டுமானாலும் இந்த லட்டுவை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நாவிற்கு நல்ல சுவையை கொடுக்கக் கூடிய இந்த ராகி லட்டு ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப், உப்பு – கால் ஸ்பூன், வேர்க்கடலை – அரை கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

ராகி உருண்டை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு ராகி மாவை எடுத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல உப்பு தூவி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அடை செய்யும் அளவிற்கு மாவு தளர்வாக பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரில் போட்டு நன்கு வட்டமாக மெல்லியதாக தட்டிக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை சுட வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். கல் காய்ந்ததும் எண்ணெயை தடவி இந்த ராகி மாவை போட்டு இரண்டு புறமும் நன்கு வேக விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் மொற மொறவென்று ஆகிவிடும். சிறு சிறு துண்டுகளாக பொடித்து உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து லேசாக சூடு பறக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வாருங்கள். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். முன்னரே மிக்ஸியில் தேவையான அளவிற்கு ஏலக்காயை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இனிப்பிற்கு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்து பவுடர் செய்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தில் இருக்கும் ஈரப்பதமே இதற்கு போதுமானதாக இருக்கும். அப்படியே உருண்டை பிடித்தால் லட்டு போல உருண்டையாக பிடிக்க வரும்.

எல்லாவற்றையும் நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதைத்தான் ராகி சிமிலி என்று சொல்லுவார்கள். இதை ராகி உருண்டை என்றும் கூறலாம். ராகி போன்ற சிறுதானிய உணவுகளில் செய்யும் இந்த லட்டு ரொம்பவே ஆரோக்கியமானது எனவே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம்.

அசத்தலான சுவையுடன் இருக்கக்கூடிய இந்த ராகி லட்டு செய்வது சுலபம் தான். அடிக்கடி பிரஷ்ஷாக செய்து சாப்பிட்டால் தான் நல்லது எனவே மொத்த மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளாதீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சமாக செய்து ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -